👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
பத்தாம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த எஸ்.எஸ்.கோட்டை பள்ளி மாணவர் சண்முகவேலுக்கு சிவகங்கை கலெக்டர் ரூ. 1 லட்சம் நிதி வழங்கினார்.சிங்கம்புணரியை அடுத்த எஸ்.செவல்பட்டி அய்யனார்புரத்தை சேர்ந்தவர் மாணவர் சண்முகவேல். இவர் எஸ்.எஸ்.கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியில் படிக்கிறார். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண் பெற்றார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சாதனை புரிந்த நிலையில் தான் படிக்க பொது அறிவு புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று இவர் கூறியது பற்றி தினமலர் இதழில் மே 10ல் செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் சண்முகவேலை சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டினார். அப்போது மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை அவருக்கு வழங்கினார். அத்துடன் அவரது குடும்பத்திற்கு ரூ. 2.30 லட்சம் செலவில் பசுமை வீடு கட்டித்தரவும் ஆணை பிறப்பித்தார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து, ஊரக வளர்ச்சி இயக்க திட்ட இயக்குநர் வடிவேல், கலெக்டரின் நேர்முக ஊதவியாளர் (பொது) ராமபிரதீபன், சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தமகாலிங்கம் உள்ளிட்டோரும் சண்முகவேலை பாராட்டினர். மாணவர் சண்முகவேல் கூறியபோது: கலெக்டர் கொடுத்த பணத்தை புத்தகங்கள் வாங்கவும், மேற்படிப்புக்கும் செலவு செய்வேன், என்றார். தினமலர் செய்தி எதிரொலியாக பலர் புத்தகங்களை நேரிலும், தபாலிலும் அனுப்புகிறார்கள், என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U