மத்திய, மாநில அரசு திட்டத்தில் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூரிய மின்திட்ட இலவசபயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 31, 2019

மத்திய, மாநில அரசு திட்டத்தில் ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூரிய மின்திட்ட இலவசபயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கோவை அருகே வடவள்ளியில் இயங்கி வரும் நேர்டு பன்னாட்டு புதுப்பிக்க கூடிய எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தின் பயிற்சி இயக்குநர் காமராஜ் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தில் சூரிய மித்ரா எனப்படும் சூரியமின்சக்தி திட்டங்கள்.
நிறுவுதல் மற்றும் பராமரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இரண்டு மாதம் தொழிற்கல்வி மற்றும் ஒருமாதம் சூரியமின் நிறுவனங்களில் நேரடி பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படித்தவர்கள், பத்தாம் வகுப்பு உடன் ஐடிஐ, எலக்ட்ரிகல், ஒயர்மேன், எலக்ட்ரானிக்ஸ் அல்லது டிப்ளமோ எலக்ட்ரிகல், மெக்கானிகல், சிவில் எலக்ட்ரானிக்ஸ் படிப்பு தகுதியாகும். இதற்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் குறுகியகால பயிற்சியாக 45 நாட்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கும் தேர்வு வைக்கப்பட்டு அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க கூடிய எரிசக்தி அமைச்சகம் மூலம் நடத்தப்படுகிறது. மத்திய அரசு 2022க்குள் ஒரு லட்சம் மெகாவாட்ஸ் சோலார் மின்உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதால் இதனை அடைய 5 லட்சத்திற்கும் ேமற்பட்ட பயிற்சி பெற்ற வல்லுநர்கள் ேதவைப்படுகின்றனர். இதற்காகவே இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது
பயிற்சியை முடித்த பலரும் சூரிய மின்நிலையம் அமைக்கும் தொழிற்சாலைகள் மற்றும் சொந்தமாக சூரிய மின்நிலையங்கள் அமைத்து கொடுக்கும் நிறுவனங்களை ஆரம்பித்துள்ளனர், வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு பெறலாம். நான்காம் கட்ட பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன்1ம் தேதி துவங்குகிறது. இளைஞர்கள் தங்களது பெயர்களை 94439 34139 என்ற எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு நேர்டு நிறுவன பயிற்சி இயக்குநர் காமராஜ் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews