👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடைப் பெற சான்றிதழ் விழுப்புரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என இடஒதுக்கீடு பெறும் வரம்பிற்குள் வராதவர்களுக்கு, மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கும் வகையில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என வரம்பிட்டு, அவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்: ஏற்கெனவே உள்ள இடஒதுக்கீட்டுக்கான வரம்பின் கீழ் வராமலும், அதே நேர்வில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருந்தால் அவர்கள் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் பயன்பெறுவர்.
5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் கொண்டவர்கள், ஆயிரம் சதுரடிக்கு மேல் வீட்டுமனை வைத்திருப்பவர்கள், நகராட்சிப் பகுதிகளில் 100 சதுர யார்டுக்கு மேல் வீட்டு மனை வைத்திருப்பவர்களுக்கு இப்பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு இல்லை. இட ஒதுக்கீடு கோருபவரின் தாய், தந்தை மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட உடன் பிறந்தோருக்கும் இந்த பயன் கிடைக்கும். அதேபோல, இடஒதுக்கீடு கோருபவரின் மனைவி அல்லது கணவர், 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கும் இந்த பயன் கிடைக்கும். சான்றிதழ் பெறுவதற்கான வருமானம் என்பது, அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஊதியம், விவசாயம், தொழில் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தை குறிக்கும். விண்ணப்பிக்கும் ஆண்டுக்கு முந்தைய நிதியாண்டு வருமானத்தை குறிப்பிட வேண்டும். விண்ணப்பதாரர் குடும்பத்தின் சொத்து அமைந்துள்ள இடம் தொடர்பாக, கிராமம், நகர்புறத்தில் உள்ள கிராம கணக்கு ஆவணங்களை ஆய்வு செய்தும், விசாரணையும் விஏஓக்கள் மேற்கொள்வார்கள். வருவாய் ஆய்வாளர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் விசாரணை மேற்கொண்டு பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சான்றிதழ்களை வழங்க வட்டாட்சியருக்கு பரிந்துரை செய்வார்கள்.
இதனை உறுதி செய்து வட்டாட்சியரால், வருவாய் மற்றும் சொத்துச் சான்று வழங்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தகுதியானவர்கள், வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, இந்த சான்றினை பெற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U