👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
அப்போது சூரியன் நமது தலைக்கு நேர் உச்சியில் இருக்கும். இதனால் மதிய நேரத்தில் நாம் சூரிய ஒளியில் நின்றால் நமது நிழல் நமது பாதத்தின் கீழ் நேராக விழும். அதனால் நமது நிழலை நாம் பார்க்க முடியாது. இந்த நிழ்வுக்கு நிழலில்லா நாள்(Zero Shadow Day) என்று பெயர். மற்ற நாட்களில் நமது நிழல் நமது பின்புறம் அல்லது முன்புறம் விழுவதை நாம் பார்க்க முடியும். சென்னையில் இந்த நாள் ஏப்ரல் 24ம் தேதி நிகழ்கிறது.
இந்த நாளில் சென்னையில் வசிப்போர் மதிய வேளையில் சூரியன் நமது உச்சிக்கு வரும் ேபாது நமது நிழலை நாம் பார்க்க முடியாது. அதற்கு பிறகு சூரியன் மேற்கு நோக்கி நகரும் போது நமது நிழலை நாம் பார்க்க முடியும். இது போன்ற நிகழ்வு ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தின் சார்பில் சென்னை காந்திமண்டபம் சாலையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தில் ஏப்ரல் 15ம் தேதி ஒரு கருத்தரங்கு மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

15ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கிறது. 7ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம். இது தொடர்பான விவரங்கள் வேண்டுவோர் 044-24410025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்