👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
திருக்குறள்:163
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
உரை:
பழமொழி :
A journey of a thousand miles begins with a single step
ஆயிரம் கல் தொலைவுப் பயணமும் ஒரே ஒரு எட்டில்தான் தொடங்குகிறது
பொன்மொழி:
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
- லியோ டால்ஸ்டாய்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
2.மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?
1801
நீதிக்கதை :
சிங்கமும் சிறு எலியும்
(The Lion and The Mouse)
ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டு இருந்தது.
அங்கு வந்த எலி சிங்கத்தின் மீது குதித்து விளையாடியது.
இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்” என்று கர்ஜித்தது.
ஆனால் எலியோ! சிங்கத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்”. எனக் கெஞ்சிக் கேட்டது.
சிங்கத்திடம் “இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்” என்றது. சிங்கமோ, “இவ்வளவு சிறிய உடம்பை வைத்துகொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?” என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.
சில நாட்களின் பின் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேடர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிகொண்டது.
வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது.
சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.
நீதி: உருவத்தை யாரையும் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது.
இன்றைய செய்தி துளிகள் :
2) மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வு முடிவுகளை வெளியி்ட தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை
3) நூறு நாள் வேலை திட்டத்தில் கூலியை உயர்த்த தேர்தல் ஆணையம் அனுமதி
4) ஆசிரியர் தகுதி தேர்வுக்கான புதிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு : தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க உத்தரவு
5) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஐ.பி.எல் நிர்வாகம் அதிரடி!
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

