ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 04, 2019

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சேலத்தில் உள்ள டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிவியல் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பெங்களூரில் உள்ள அறிவியல் சார்ந்த இடங்கள் மற்றும் இஸ்ரோவுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அறிவியல் சுற்றுலாவுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் திட்டம் குறித்து டார்வின் சயின்ஸ் கிளப் செயலாளர் தினேஷ் செல்வராசு நம்மிடம் கூறுகையில், ‘‘இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (Indian Space Research Organization - ISRO) தலைமைப் பணியகம் பெங்களூரில் உள்ளது. உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் இஸ்ரோ ஆறாவது இடத்தில் உள்ளது.

இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இஸ்ரோ மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விண்வெளி அறிவியல் தொழில்நுட்பச் செயல்பாடுகளை அறியவும், ராக்கெட் தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்ளவும், அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன்படி ஒரு மாவட்டத்திற்கு 3 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்து அழைத்துச் செல்லப்படுவார்கள்.
ஆனால், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த டார்வின் சயின்ஸ் கிளப் சார்பில் அறிவியல் சார்ந்த அறிவைப் பெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு (இஸ்ரோ) கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்தச் சுற்றுலா மூலம் நேரடியாகப் பார்க்கும்போது மாணவர்களின் அறிவு மேம்படும். பாடப் புத்தகத்திற்கும், காட்சிப்படுத்தும் பொருட்களுக்கும் உள்ள வித்தியாசம் புரியும். இதனால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்க வாய்ப்பு உருவாகும்.

அதேபோல், பாடப் புத்தகங்களைப் பார்த்து பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நேரடியாகப் பார்க்கும்போது அதனை விளக்குவதற்கு ஏற்ற புரிதல் ஏற்படும். உதாரணமாக மகேந்திரகிரியில் எரிபொருள் உற்பத்தி, திருவனந்தபுரத்தில் ராக்கெட் தொழில்நுட்பம், ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம், டேராடூனில் Remote Sensing போன்ற பணிகள் நடைபெறுகின்றன. அதேசமயம், பெங்களூரில் உள்ள ISRO தான் அனைத்து இடங்களிலும் உள்ளவற்றை ஒப்பிடும்போது முதல் இடமாக, தலைமை இடமாகச் செயல்படுகிறது. ஏறக்குறைய 15 துறைகள் பெங்களூரு ISRO-வில் செயல்படுகிறது. செயற்கைக்கோள் பொருத்துவது முழுவதும் இங்குதான் நடைபெறுகிறது.
அதனால்தான் முறையாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் அனுமதி பெற்று சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறோம்’’ என்று அறிவியல் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவதற்கான காரணத்தைத் தெரிவித்தார் தினேஷ். அறிவியல் சுற்றுலாவுக்கான ஏற்பாடுகள் பற்றி அவர் கூறும்போது, ‘‘பெங்களூரில் உள்ள அறிவியல் சார்ந்த இடங்களான VITM, AERO SPACE MUSEUM, PLANETARIUM, IDEA LAB மற்றும் ISRO ஆகிய இடங்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட இரண்டு நாட்கள் அறிவியல் சுற்றுலாவைத் திட்டமிட்டுள்ளோம்.

பெங்களூரில் உள்ள மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட Activity Educator மற்றும் ISCOPE ஆகிய நிறுவனங்களோடு இணைந்து தமிழகத்தில் உள்ள நமது Darwin Science Club தமிழகம் முழுவதும் அறிவியல் ஆர்வம் உள்ள பள்ளி & கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை அழைத்துச் சென்று வருகிறது. அதனால், ISROவை பார்வையிட ஆர்வமுள்ள அனைத்து மாவட்ட பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் தங்கள் அறிவியல் மீதான ஆர்வத்தை மேலும் மேம்படுத்திட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப் பள்ளியில் இஸ்ரோ போன்று மாதிரி ஆய்வுக்கூடம் அமைத்து மாணவர்களுக்குப் பயிற்சி மற்றும் காட்சிப்படுத்துதலைச் செய்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அறிவியல் சுற்றுலா செல்ல ஆர்வம் உள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு Darwin Science Club, Konganapuram, Salem, 8667504128 (தினேஷ் செல்வராசு- செயலாளர்) என்ற எண்ணிலோ அல்லது darwinscienceclubkpm@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்புகொள்ளலாம்’’ என்றார்.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews