👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் உயர்கல்வித்துறைக்கு இடையேயான மோதல் அதிரடியாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் இருந்து விடுவித்து புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்கி தனியார் பொறியியல் கல்லூரிகளை அதனுடன் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையினை அரசுக்கு வைக்க தனியார் பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
நிகர்நிலைப்பல்கலைக்கழங்களை தவிர்த்து தமிழகத்தில் உள்ள 550-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணா பக்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்ட பின்னர் தமிழக உயர்கல்வித்துறைக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் சுமூக போக்கு நிலவவில்லை .
இதன் எதிரொலியாக தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் கூடுதல் உறுப்பினர்களை தமிழக உயர்க்கல்வித்துறை நியமித்தது.
மேற்கண்ட நியமணங்கள் தன்னை கலந்தாலோசிக்காமல் நடைபெற்றதாக பொறியியல் மாணவர் சேர்க்கை தலைவர் பொறுப்பில் இருந்து சூரப்பா ராஜினாமா செய்தார்.
மேலும் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கலந்தாய்வினை நடத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது.
அரசுக்கும் துணைவேந்தர் சூரப்பாவிற்கும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் இருந்து தனியார் கல்லூரிகளை பிரித்து பொறியியல் கல்லூரிகளுக்கென்று தனியாக தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதனுடன் பொறியியல் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகள் மூலம் ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேர்வுகட்டணம்,பதிவு கட்டணம் உள்ளிட்டவற்றின் மூலம் ஆண்டுதோறும் 1200 கோடி ரூபாய் வருவதாக தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் தங்களை மாற்றாந்தாய் மனப்போக்குடன் நடத்துவதாக குற்றச்சாட்டு தனியார் கல்லூரிகளின் தரப்பில் எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த தேர்வு சீர்த்திருத்தங்கள், உள்ளிட்ட சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்ததுடன் மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது என்பது தனியார் கல்லூரிகளின் தரப்பில் முன்வைக்கப்படுகிற வாதமாக உள்ளது.
இதனையடுத்து பிரத்யேக அரசாணை மூலமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 500-க்கும் மேற்ப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளை விடுவித்து தனியார் கல்லூரிகளை நிர்வகிக்கும் விதமாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பினர் நடத்திய ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசிடம் வேண்டுகோள் வைக்கவும் தனியார் கல்லூரி கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரிகளின் முடிவு பரபரப்பினை ஏற்ப்படுத்தியுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்