எஸ்எஸ்எல்சி கணித தேர்வு கடினம் மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 26, 2019

எஸ்எஸ்எல்சி கணித தேர்வு கடினம் மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
எஸ்எஸ்எல்சி கணித தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் தெரிவித்தனர். இதனால், இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர். தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. நேற்று கணித தேர்வு நடந்தது. தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கூறும்போது, தேர்வு கடினமாக இருந்ததாக தெரிவித்தனர். இதே கருத்தை கணித ஆசிரியர்களும் கூறினர். சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தேர்வெழுதிய மாணவிகளிடம் கேட்டபோது, ‘‘5 மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. 1 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் பரவாயில்லை’’ என்று தெரிவித்தனர். கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக பெரும்பாலான மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவித்திருப்பதால் இந்த ஆண்டு கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும். கடினமான வினாக்கள் கேட்கப்பட்டதற்கு கணித ஆசிரியர்களும் அதிருப்தி தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:கணித வினாத்தாள் மாணவர்களை மட்டுமல்ல, ஆசிரியர்களையும் கலக்கமடையச் செய்துவிட்டது. முதல்முறையாக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சமடையவும், மன ரீதியாக பாதிக்கும் வகையிலும் கேள்வித்தாள் அமைந்துள்ளது. பொதுவாக 50% எளிமையாகவும், 30% சராசரியாகவும், 20% கடினமாகவும் வினாத்தாள் அமையலாம். ஆனால்,வினாத்தாள் தயாரித்தவர் தனது திறமையை வினா வடிவமைப்பில் காட்டியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் வராத வினாக்களாக 5 மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் உள்ளன. 1 மதிப்பெண் வினாவும் அப்படித்தான் இருக்கிறது. மெதுவாக கற்கும், சராசரி மாணவர்களை இந்த வினாத்தாள் கலக்கமடையச் செய்துள்ளது. மற்ற பாடங்களில் 90, 95 மதிப்பெண் எடுப்பவர்கள் கணிதத்தில் குறைவாக எடுக்கும்போது, கடின உழைப்பை அளித்த கணித ஆசிரியர்கள் மனம் படும் வேதனை எங்களுக்குத்தான் தெரியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews