தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: நாளை முதல் விடைத்தாள் நகல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 26, 2019

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: நாளை முதல் விடைத்தாள் நகல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள், தனித்தேர்வர்கள் விடைத்தாள்களின் நகல்களை புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஜுன் மாதம் தேர்வு நடைபெற்றது. இதையடுத்து அந்தத் தேர்வின் விடைத்தாள்களின் ஒளிநகல் கோரி விண்ணப்பிக்க, கடந்த மார்ச் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை அனுமதியளிக்கப்பட்டது. அந்த நாள்களில் விண்ணப்பித்த தேர்வர்கள் விடைத்தாள்களின் ஒளிநகல்களை மார்ச் 27- ஆம் தேதி புதன்கிழமை முதல் 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டல்- மறுமதிப்பீடு: இதைத் தொடர்ந்து விடைத்தாள்களின் ஒளிநகல்களை பெற்ற பாடங்களுக்கு மட்டும் தேர்வர்கள் விருப்பம் இருப்பின் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு scan.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையை மார்ச் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையிலான நாள்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விடைத்தாளின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாளின் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.505 கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்திருக்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews