Breaking

Saturday, March 23, 2019

ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,க்களுக்கு பணி பணியில் உள்ளவர்கள் அதிருப்தி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிகளை, தேர்தல் நேரத்தில் மீண்டும் பணியில்சேர்ப்பது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், ஆயிரக்கணக்கில் கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடம் காலியாகி உள்ளது. கூடுதல் பணிச்சுமையுடன் ஓய்வின்றி பணியாற்றி வரும்,கிராம நிர்வாக அதிகாரிகள், தங்களது பணிச்சுமையை குறைக்க, பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கோரிக்கையை பரிசீலித்த, தமிழக அரசு திடீரென, ஓய்வு பெற்றகிராம நிர்வாக அதிகாரிகளை, 15 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணி அமர்த்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது.தகவல் அறிந்த, இன்றைய கிராம நிர்வாக அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணி அமர்த்தி ஊதியமாக கொடுப்பது, 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே.ஆனால், புதியவர்களை தேர்வு செய்தால், ஆரம்ப சம்பளமே, 19 ஆயிரத்து, 500 ரூபாய் தர வேண்டும் என கூறப்படுகிறது.கூடுதல் ஊதியத்தை கொடுக்க முன்வராத அரசு, மீண்டும் பழைய நபர்களையேபணி நியமனம் செய்ய உள்ளது.ஓய்வூதியம் பெறுவோரை, தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்துவதுநியாயம் இல்லை என, புதியவர்கள் குமுறுகின்றனர்.ஆனால், ஓய்வு பெற்றவர்களை எதற்காக மீண்டும் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள், அரசியல் காரணமா அல்லது அ.தி.மு.க., அரசுஆட்சிக்காலத்தில் பணியில் சேர்ந்தவர்கள் என்பதாலாஎன, கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog