👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

இந்தியாவில் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்த ஆண்களின் எண்ணிக்கை கடந்த 2011 - 12 முதல் 2017 - 18 வரையான ஐந்து ஆண்டுகளில் சுமார் 2 கோடி பேராக அதிகரித்திருக்கிறார்களாம்.
இதை தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) சொல்லி இருக்கிறது. இந்த அறிக்கையைத் தான் பாஜக அரசு தொடர்ந்து மறைத்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய மாதிரி சர்வே அலுவலகம் Periodic Labour Force Survey என்கிற பெயரில் இந்தியாவில் வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிடும். இந்த Periodic Labour Force Survey 2017 - 18-க்கான அறிக்கை இதுவரை வெளியாகவில்லை.
லேபர் சர்வே 2017 - 18 Periodic Labour Force Survey 2017 - 18:
பத்திரிகைகளுக்கு கிடைத்திருக்கும் Periodic Labour Force Survey 2017 - 18 விவரங்கள் படி, இந்தியாவில் 2017 - 18-ம் ஆண்டு நிலவரப்படி 28.6 கோடி ஆண்கள் மட்டுமே வேலையில் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால் 2011 - 12-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 30.4 கோடியாக இருந்தது என்பதும் கவனிக்கத்தகக்து.
முதல் முறை 1993 -94-க்குப் பிறகு:
1993 - 94-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு குறைவது இதுவே முதல் முறை. 1993 - 94-ம் ஆண்டில் இந்தியாவில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு 21.9 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை தான் படிப்படியாக அதிகரித்து 2011 - 12-ம், ஆண்டில் 30.4 கோடியாக அதிகரித்திருக்கிறது. இப்போது பாஜக ஆட்சிக் காலத்தின் முடிவில் 28.6 கோடியாகவும் இறக்கம் கண்டிருக்கிறது.
நகரம் மற்றும் கிராமம் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு:
ஆண்களுக்கான வேலைவாய்ப்பு நகர் புறங்களில் 7.1 சதவிகிதமாகவும், கிராமபுறங்களில் 5.8 சதவிகிதமாகவும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது. அதாவது கிராம புறங்களில் வாழும் ஆண்களை விட நகர் புறங்களில் வாழும் ஆண்கள் தான் அதிகம் வேலையிழப்பைச் சந்தித்திரு இருக்கிறார்கள்.
வெளி வரவில்லை தலையீடு:
இந்த தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் Periodic Labour Force Survey அறிக்கையைத் தான் தேசிய புள்ளியியல் ஆணையம் டிசம்பர் 2018-லேயே வெளியிட அனுமதி கொடுத்தது. ஆனால் சில அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தலையீடு அதிகமாக இருந்ததால் தான் எந்த ஒரு தகவலும் இன்னும் பொது வெளிக்கு வரவில்லை. ஜனவரி 2019-ல் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த மோகனனனும் இதை காரணமாக வைத்து தன் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததும் நடந்தேறிவிட்டது. ஆனால் இன்று வரரை Periodic Labour Force Survey 2017 - 18 மட்டும் இன்னும் வெளியாகவில்லை.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்