Breaking

Saturday, March 23, 2019

சிட்டுக்குருவிகள் தின விழா கொண்டாடிய பள்ளி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஓவியம், கவிதைகள், கண்காட்சியின் மாதிரி படைப்புகள் வைக்கப்பட்டு, சிட்டுக்குருவி இனத்தை பேணி பாதுகாக்க வழி முறைகள் கூறப்பட்டது.ஆசிரியர்கள் கூறியதாவது:இயற்கை விவசாயத்தை பேணுவதன் மூலம் சிட்டுக்குருவியின் உணவான புழு, பூச்சி அழியாமல் காக்கலாம்; அவற்றின் மூலம் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கலாம்.தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயமாதல் மூலம், சிட்டுக்குருவிகள் கூடு கட்டி வாழ வாழிடம் இல்லாமல் அழிகிறது. சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ப கான்கிரீட் வீடுகளுக்கு மேல், சிட்டுக்குருவி கூண்டுகள், பாதுகாப்பு பெட்டிகள், அவற்றில் உணவு மற்றும் நீர் வைக்க வேண்டும். தானியங்களையும், நீர் உள்ள பாத்திரங்களையும் ஆங்காங்கே வீடுகளிலும், மரத்தின் அடியிலும் வைத்து சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்கலாம். இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கல்லுாரியில் மரக்கன்று நடும் விழாபொள்ளாச்சி அருகே மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனத்தில், உலக வன தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனத்தின் முதன்மையர் பாலுசாமி தலைமையில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாட்டை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரதீஷ்குமார், உதவி திட்ட அலுவலர் தமிழ்செல்வி, உதவி பேராசிரியர் முரளிதரன் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.பி.ஏ., கல்லுாரியில் தேசிய கருத்தரங்குபொள்ளாச்சி பி.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் அறிவியல் மற்றும் மனித பண்பாட்டியல் துறை சார்பில், சி.எஸ்.ஐ.ஆர்., மானியத்துடன் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி தலைவர் அப்புக்குட்டி தலைமை வகித்தார். கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர் ஜீவதாஸ் பேசினார்.இதில், கல்லுாரி முதல்வர் மணிகண்டன், நிர்வாக அலுவலர் பழனிசாமி, முதலாம் ஆண்டு துறை தலைவர் யுவராஜா, பிற துறைத்தலைவர்கள், பல்வேறு நிறுவனத்தில் இருந்து பிரதிநிதிகள், பேராசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி சுபாஷ் கலை, அறிவியல் கல்லுாரியில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி தாளாளர் கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். செயலர் கனகரத்தினம், கல்லுாரி துணைத்தலைவர் ராஜபூபதி முன்னிலை வகித்தார்.ஓட்டுப்போடுவதன் அவசியம், ஒவ்வொரு குடிமகனும் தேர்தல் நடைபெறும் நாளில், தவறாமல் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டு பதிவு செய்ய வேண்டும் என்றும்; சேவை செய்யக்கூடிய நல்ல வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டன.
வருவாய் ஆய்வாளர் பட்டுராஜ் பேசினார். மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி, பேச்சு போட்டி, நாடகம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் வித்யா நன்றி கூறினார்.பல்கலை கல்லுாரி ஆண்டு விழா பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதலாம் ஆண்டு விழா, கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நடந்தது. பாரதியார் பல்கலை துணை வேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஜெயக்குமார் பேசினார். கல்லுாரி மாணவர்களின் யோகா, நடனம், தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணராஜ், பேராசிரியர் நிர்மலாதேவி ஆகியோரால் தொகுக்கப்பட்ட நுால் வெளியிடப்பட்டது. இதில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog