ரயில்வே குரூப் டி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 06, 2019

ரயில்வே குரூப் டி தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சென்னையில் நடைபெற்ற ரயில்வே துறை குரூப் டி தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது அம்பலமாகி உள்ளது. ரயில்வே துறையில் குரூப் டி பிரிவில் மொத்தம் 62 ஆயிரத்து 907 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்து தேர்வு நடைபெற்றது. செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை சென்னை உள்பட 16 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஒரு கோடியே 7 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
சென்னை மண்டலத்தில் 1550 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. கணினி மூலமான எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதில் எழுத்து தேர்வுக்கான கால அவகாசம் ஒன்றரை மணி நேரம். தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வினாக்கள் இடம்பெற்று இருந்தன. கணித பிரிவில் 25 மதிப்பெண், பொது அறிவியல் பிரிவில் 25 மதிப்பெண்கள், நடப்பு செய்திகள் 20 மதிப்பெண்கள், ரீசனிங் எனப்படும் தர்க்க ரீதியிலான கேள்விகளுக்கு 30 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது. 3 தவறான விடைகளுக்கு ஒரு எதிர்மறை மதிப்பெண் அளிக்கப்படும். மார்ச் 4 ஆம் தேதி வெளியான தேர்வு முடிவு, தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
வடமாநிலத்தவர்களின் மதிப்பெண்ணை ஆய்வு செய்ததில் தேர்வில் மோசடி நடைபெற்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொத்த மதிப்பெண்களே 100 தான் என்று இருக்கும் நிலையில் கவுகாத்தி, சண்டிகர், அகமதாபாத் போன்ற வடமாநில நகரங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டும் 102, 109, 354 என மதிப்பெண்களை வாரி வழங்கி இருக்கின்றனர். தமிழக வரலாறு, கலாச்சாரம், இயற்கை அமைப்புகள் குறித்த கேள்விகளே சென்னை மண்டலத்தில் நடத்தப்படும் தேர்வில் அதிகம் இடம்பெறுவது வழக்கம். அதனைப் புரிந்து கொண்டு தேர்வு எழுதி வடமாநிலத்தவர்கள் வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற குருப் டி தேர்வில் 90 சதவீதம் பேர் வடமாநிலத்தவர்கள் தான் தேர்ச்சி பெற்று இருப்பதாக தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நியாயமான முறையில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோசடி ஒரு புறம் இருக்க, தமிழக மாணவர்களுக்கு ரயில்வே தேர்வுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறப்படுகிறது. அதனை சாதகமாகப் பயன்படுத்தி, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வந்து ரயில்வே தேர்வை எழுதி எளிதில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் ரயில்வே தேர்வுகளிலும் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews