தனது சேமிப்பில் நகராட்சி பள்ளிக்கு 50 ஆயிரத்தில் ஸ்மார்ட் போர்டு வழங்கிய முன்னாள் மாணவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 06, 2019

தனது சேமிப்பில் நகராட்சி பள்ளிக்கு 50 ஆயிரத்தில் ஸ்மார்ட் போர்டு வழங்கிய முன்னாள் மாணவி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தான் படித்த பள்ளிக்கு தனது சேமிப்பு பணத்தில் இருந்து 50 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போர்டை முன்னாள் மாணவி வழங்கி அசத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் உமர்ரோடு, கஸ்பா, புதுகோவிந்தாபுரம், சாணாங்குப்பம், ரெட்டிதோப்பு, பன்னீர்செல்வம் நகர் ஆகிய இடங்களில் நகராட்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் ரெட்டிதோப்பு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி, தாமரை தம்பதியரின் மகளான அகல்யா தனது 8ம் வகுப்பை படித்து முடித்தார். இவர் தற்போது ஆம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், தான் படித்த பள்ளிக்கு தன்னால் ஆன ஏதாவது ஒரு உபயோகமான பொருளை வழங்க வேண்டும் என மாணவி அகல்யா நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தார். இதையடுத்து, மாணவி அகல்யா, தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அவரது கை செலவிற்காக கொடுத்த பணத்தை சேமித்து வந்தார். தற்போது, அந்த பணம் 50 ஆயிரம் ஆனதையடுத்து அகல்யா அந்த பணத்தை கொண்டு தான் படித்த நகராட்சி பள்ளிக்கு நவீன தொடுதிரை வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போர்டை நன்கொடையாக வழங்கினார்.
இதுகுறித்து மாணவி அகல்யா கூறுகையில், ‘இந்த பள்ளியில் அனைத்து தலைமையாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செயல்பட்டு கல்வி கற்று தருகின்றனர். இந்த நகராட்சி பள்ளியில் படிக்க வரும் மாணவ, மாணவியர் ஏழை மற்றும் அடித்தட்டு குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும், இவர்களும் இன்றைய தகவல் தொழில் நுட்ப அடிப்படையிலான நவீன தொடுதிரை வசதியுடன் கூடிய கல்வியை பெற வேண்டும் என நினைத்தேன். அதன் காரணமாக என்னிடம் இருந்த சேமிப்பு தொகையான 50 ஆயிரத்தை செலவிட்டு நான் படித்த இந்த பள்ளிக்கு நவீன தொடுதிரையை வழங்கியதை பெருமையாக கருதுகிறேன்’ என தெரிவித்தார். இந்த மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்தியகுமார், ஆசிரியர்கள் அமர்நாத், சரவணன் மற்றும் அப்பகுதியினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews