அனைத்து முதுநிலை ஆசிரியர்களுக்கும் லேப்டாப் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 05, 2019

அனைத்து முதுநிலை ஆசிரியர்களுக்கும் லேப்டாப்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
click below link for more
click here to download details in pdf
ரூ.515 கோடியில் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் பள்ளிக்கல்வித்துறை மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்களை தலைமைச்செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. தமிழகத்தில் 6,028 பள்ளிகளில் ரூ.515 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள், நபார்டு திட்டம் மூலம் புதிதாகக் கட்டடப் பட்ட பள்ளிக் கட்டடங்களையும், ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற காணொலிக்காட்சி நிகழ்வின் மூலம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு : சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள 6 ஆயிரத்து 28 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.515.52 கோடியில் நிறுவப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களையும், பள்ளி கல்வி இயக்கக சார்பில் நபார்டு கடனுதவி திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம், பெரம்பலூர் மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிவறைகள், குடிநீர் வசதிகளையும் தொடக்கி வைத்தார். தருமபுரி மாவட்டம், மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி, மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளையும், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளையும், பொது நூலக இயக்ககம் மூலம், திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரில் அமைக்கப்பட்ட கிளை நூலகக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
தலைமை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கு மடிக்கணினி: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடங்களை கணினி மூலம் கற்பிக்க உதவும் வகையில், 29, 965 பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும், மேலும், ரூ.30 கோடியில், அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் 23, 743 பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடக்கி வைத்தார். இதில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயக்குமார், பாடநூல் கழகத் தலைவர் பா.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews