👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டப் புத்தகங்கள் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் பதிவேற்றும் முன்பே சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
புதிய பாடப்புத்தகங்கள்:
வரும் கல்வி ஆண்டு முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புத்தகங்களை அச்சிடும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
தாமதம்:
கடந்த ஆண்டு 11-ம் வகுப்புக்குப் புதிய பாடத்திட்டத்தில் அச்சான புத்தகங்கள், பள்ளி வகுப்புகள் தொடங்கிய பின் வந்தன. முதலில் ஆசிரியர்கள் அந்தப் பாடத்திட்டத்துக்கு தயாராகி, பின் பாடம் எடுக்க தாமதமானதாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
அதிகாரப்பூர்வமாக:
முன்னரே வெளியிட்டால் மாணவர்கள் விடுமுறையில் வீட்டிலேயே தயாராக உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதை சுட்டிக்காட்டி, வகுப்புக்கள் தொடங்கும் முன்பே TNSCERT எனும் அரசு இணையதளத்தில் பாடப்புத்தகங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாட்ஸ் ஆப்:
இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் முன்பே வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பி.டி.எப்., கோப்பு வடிவில் பிரதியாக வெளியாகியுள்ளது.
சிபிசிஐடி:
ஏற்கெனவே கடந்த ஆண்டு புதியப் பாடத்திட்டங்கள் பள்ளிக்கு வரும் முன்பே, அதற்கான கைடு எனும் விளக்கவுரை தனியார் பதிப்பகங்கள் மூலம் புத்தகக் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டதாக சிபிசிஐடியில் புகார் அளிக்கப்பட்டது.
புத்தகப் பிரதிகள்:
எப்படி கைடு தயாரித்தனர் என அறிவுசார் சொத்துரிமைப் புலனாய்வுப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் சர்ச்சை வந்துவிடக்கூடாது என்ற நோக்கில் தற்போது வாட்ஸ் ஆப்பில் புத்தகப் பிரதிகள் கசியவிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்