👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 2019 ஆண்டு இறுதி பொதுத் தேர்வு நடைபெறும். 1,2,3 ஆம் பருவ பாடங்களிலிருந்து பொதுவான வினாக்கள் கேட்கப்படும். குறுவள மைய அளவில் மதிப்பீடு செய்யப்படும்.
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.
இதற்கு நீண்டநாளாக எதிர்ப்பு தெரிவித்துவந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.
5 மற்றும் 8-ம் வகுப்பின் மூன்றாவது பருவத் தேர்வையே பொதுத்தேர்வாக மாற்றி நடத்தும்படி அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் கடிதம் எழுதி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித் துறை.
இதற்கான கேள்வித்தாளைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது அரசுத் தேர்வுத் துறை.
5-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களின் கேள்வித்தாளில் வார்த்தை விளையாட்டுகள், கோடிட்ட இடங்களை நிரப்புதல், பொருத்துக போன்ற வகையில் மாணவர்களின் மொழிசார்ந்த அடிப்படை விஷயங்களைப் பரிசோதிக்கும் வகையில் கேள்விகளும், கணிதப் பாடத்தில் பெருக்கல், வகுத்தல் சார்ந்த எளிய கணிதங்கள் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும்.
8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் புரிதல் திறன், எழுதும் திறனையும் சோதிக்கும் வகையில் கட்டுரை வடிவில் கேள்வித்தாளை அமைக்கவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இரண்டு வகுப்புகளுக்கும் கேள்வித்தாள் 50 மதிப்பெண்கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பெறும் மதிப்பெண், பிறகு 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்பட்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடவுள்ளது பள்ளிக்கல்வித் துறை
தேர்வு மையங்களை அடையாளம் காணும் பணியைத் தொடங்கவும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது பள்ளிக்கல்வித் துறை. இந்தக் கடிதத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 மற்றும் 8 ம் வகுப்பில் எவ்வளவு மாணவர்கள் படிக்கிறார்கள் என்ற விவரங்களைத் தொகுத்து வழங்கவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 20-க்கும் குறைவில்லாமல் உள்ள பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கான மையங்களை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், குறைந்த மாணவர்கள்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு 3 கிலோமீட்டர் தூரத்துக்குள் போக்குவரத்து வசதிகள் எளிதாக இருக்கும் வகையில் தேர்வு மையங்களை அமைக்கும் வகையில் செயல்படவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
``அனைவருக்கும் இலவசக் கல்வித் திட்டத்தின்கீழ், 6 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களைப் பள்ளியில் எப்போது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு முறையால் தடை ஏற்படுத்தாமல் படிப்பதற்கான வாய்ப்பு வழங்க வேண்டும். பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் நிலை ஏற்படுத்தியிருப்பது கவலைக்குரிய விஷயம்.
ஏற்கெனவே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் வேளையில் பொதுத்தேர்வு நடத்துவதால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறையவே செய்யும்.
குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும்" என்கின்றனர் கல்வியாளர்கள்.
இதற்கு மத்திய அரசு, ``5 மற்றும் 8 ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு, தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்வார்கள்
. தேர்ச்சி பெறாதவர்கள் இரண்டு மாதத்தில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அந்தத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே தொடர்ந்து அதே வகுப்பில் படிக்கவேண்டியிருக்கும்'' எனத் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ``தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகளைக் கேட்ட பிறகு, அமைச்சரவை கூடி முடிவுசெய்யும்" என்று அறிவித்துள்ளார்.
இதனால், பொதுத்தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களின் சேர்க்கை குறையுமா அல்லது கல்வியின் தரம் கூடுமா என்பதை, பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
நன்றி: விகடன்
ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான ஆயத்த பணிகளை பள்ளி கல்வி துறை தொடங்கியுள்ளது.நாடு முழுவதும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் கட்டாய தேர்ச்சி அடையும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால், எழுத, படிக்க தெரியாமல் எட்டாம் வகுப்பு வரை முன்னேறுகின்றனர். எனவே ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு வைக்க வேண்டும் என மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.அதன்படி சமீபத்தில் பள்ளி கல்வி துறை சார்பில், சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர்களுக்கு இடையே நடந்த கூட்டத்தில், பொது தேர்வு வைப்பதால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஐந்து, எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு வைப்பது எனவும், தேர்ச்சி, தோல்வியை தற்போது முடிவு செய்ய வேண்டாம். விடைத்தாள் திருத்தும் பணி வட்டார வளமையத்தில் மேற்கொள்ள வேண்டும். ஐந்து, எட்டாம் வகுப்புக்குரிய இறுதி தேர்வு வினாத்தாள்கள் மாவட்ட வாரியாக அச்சிட வேண்டாம். மாநில வாரியாக அனுப்பப்படும். 20 மாணவர்களுக்கு கீழ் இருந்தால், அவர்களை அருகில் உள்ள பள்ளியில் தேர்வெழுத முயற்சி மேற்கொள்ள வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும் 100-க்கும் மேற்பட்ட தொடக்க பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பில் 10-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். தேர்வன்று இந்த மாணவர்களை அருகில் உள்ள மையங்களுக்கு அழைத்து செல்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. போதுமான அவகாசம் இல்லை, என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் எட்டாம் வகுப்புக்கு மட்டும் பொது தேர்வு முறையை அமல்படுத்தலாம் எனவும் ஆலோசனை கூறியுள்ளனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்