👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
'தேர்வு நேரத்தில், மாணவர்கள் பாதிக்கும் வகையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடலாமா?&' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அதிருப்தி தெரிவித்தது.
மதுரை வழக்கறிஞர், மனோஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். ஆசிரியர் சங்கங்களில், ஓய்வு பெற்றவர்கள், நிர்வாகிகளாக உள்ளனர். அவர்களை நீக்க வேண்டும்.
அரசாணைப்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆசிரியர்களை இடமாறுதல் செய்ய வேண்டும். 12 ஆசிரியர் சங்கங்கள் சட்டவிரோதமானவை, செல்லாதவை என, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.
தூய்மையாகும்
நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.நீதிபதி கிருபாகரன்: பணி புரியும் இடம் என்பது, கோவிலுக்குமமானது.
முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். குழந்தைகளை ஆசிரியர்கள் கண்டித்தால், பெற்றோர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யச் செல்கின்றனர்.
&'ஒழுங்காக வேலை செய்ய வேண்டும்; சரியான நேரத்திற்கு பணிக்குச் செல்ல வேண்டும்&' என, எந்த தொழிற்சங்கமாவது, அதன் உறுப்பினர்களுக்கு கூறுகின்றனவா?
தவறு செய்பவர்களை பாதுகாக்கும் வகையில் தான், தொழிற்சங்கங்கள் உள்ளன.குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களை சங்கத்தில் இருந்து நீக்கியதாக கூற முடியுமா? கறை படிந்தவர்களை சேர்க்க மாட்டோம் என, அனைத்து சங்கங்களும் முடிவெடுத்தால் தான், அரசுத் துறைகள்துாய்மையாகும்.
அரசு பரிசீலிக்கலாம்
சில சமயங்களில், காரணமின்றி, தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சிலர், &'பிளாக்மெயில்&' செய்கின்றனர். இது, அ.தி.மு.க., - தி.மு.க., என, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்கிறது. நாடு குட்டிச் சுவர் ஆகிறது.தேர்வு நேரத்தில், மாணவர்கள் பாதிக்கும் வகையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடலாமா? அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளி, ஆசிரியர்களின் குழந்தைகள், தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் படித்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரிகளில், 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்கலாமே. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், &'அரசின் வருவாயில், அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்கு, 71 சதவீதம் சென்று விடுகிறது&' என்றார்.விசாரணையை, பிப்., 25க்கு, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்