பொதுத்தேர்வு மாணவரா நீங்க... தேர்வுத்துறை சொல்வதை கேளுங்க! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

பொதுத்தேர்வு மாணவரா நீங்க... தேர்வுத்துறை சொல்வதை கேளுங்க!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பிளஸ் 2 தேர்வு நாளை மறுதினம் (1ம் தேதி) துவங்குகிறது. அதனை தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடக்கவுள்ளது.தேர்வுக்கு மாணவர்களும், கல்வித்துறையும் சுறுசுறுப்பாக தயாராகி வரும் நிலையில், தேர்வறையில் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதனை மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.அதன் விபரம்தேர்வு துவங்கும் முன் உங்களுக்கு வழங்கப்பட்ட முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அமர்ந்திருக்கும் நாற்காலி, எதிரே உள்ள மேஜை, அருகில் எவ்விதமான துண்டு சீட்டுகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். விடைத்தாளின் முன் பக்கத்தில் உங்களது பெயர், போட்டோ, பயிற்று மொழி ஆகிய விபரங்களை சரிபார்க்கவேண்டும்.விடைத்தாளில் எந்தப்பகுதியிலும் தேர்வு எண்ணை கண்டிப்பாக எழுதக்கூடாது. தேர்வு எழுதும் போது &' ரப் ஓர்க் &' செய்வதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை (கடைசி தாளை) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கூடுதல் விடைத்தாள்களை வேண்டுமெனில் கடைசி இரண்டு தாள்களில் இருக்கும் போதே கேட்டு பெற்றுக் கொள்ளலாம். முடிந்தவரை அடித்தால், திருத்தல் இல்லாமல் தேர்வுஎழுத வேண்டும்.தேர்வு முடிந்த பின் கூடுதல் பக்கங்கள் இருப்பின் அவற்றை கோடிட வேண்டும். ஒருவர் தேர்வுக்கு வரவில்லையேனில், அவ்விடத்தில் சென்று அமரக்கூடாது.அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அமர வேண்டும். &'ஓவர் சாய்ஸில்&' எழுதிய விடைகளை கோடிட்டு அடிக்கும் போது, இந்த விடை என்னால் அடிக்கப்பட்டது என பேனாவால் எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் அவ்விடத்தில் தேர்வு எண்ணோ, பெயரோ எழுத கூடாது. இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews