👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648

புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டுவந்த, அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மையத்தை, தமிழக அரசு தேர்வுத்துறை இந்த ஆண்டு திடீரென ரத்து செய்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்திற்கென தனியாக கல்வி வாரியம் இல்லாததால், தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை கட்டுப்பாட்டில் புதுச்சேரி, காரைக்கால் இருந்து வருகிறது. தமிழக பாடத்திட்டங்களே இங்கு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேலும், புதுச்சேரியில் அரசு பொதுத்தேர்வு மையங்கள் அமைப்பது, விடைத்தாள்கள் வழங்குவது, விடைத்தாள்கள் திருத்தி, முடிவுகளை அறிவிப்பது வரையில், தமிழக பள்ளி கல்வி தேர்வு துறை செய்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் முடிந்ததும், விடைத்தாள்கள் தமிழக அரசு தேர்வு துறையிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து திருத்தி, முடிவுகளை அறிவிப்பார்கள்.
மேலும், விடைத்தாள் திருத்துவதற்காக கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு புதுச்சேரி ஆசிரியர்கள் அனுப்பி வைக்கப்படுவர். இந்த நடைமுறை காலம் காலமாக இருந்து வந்த நிலையில், புதுச்சேரி ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் சங்கடங்களை தவிர்க்க புதுச்சேரியில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க, தமிழக தேர்வு துறையிடம், புதுச்சேரி கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த 2014ம் ஆண்டு இயக்குனராக இருந்த வல்லவன் முயற்சி எடுத்தார்.
தேர்வு நுழைவு சீட்டில் புகைப்படம், ஆன் லைன் மூலம் நுழைவு சீட்டு, மதிப்பெண் பட்டியலில் புகைப்படம் என, தேர்வில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த அப்போதைய தமிழக தேர்வு துறை இயக்குனர் தேவராஜ், 2014ம் ஆண்டு முதல் முறையாக, புதுச்சேரிக்கு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு அனுமதி கொடுத்தார்.அதுமுதல், கடந்த ஐந்து ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இன்றி புதுச்சேரியில் விடைத்தாள் திருத்தும் மையம் செல்பட்டு வந்தது. தமிழகத்தின் ஏதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து விடைத்தாள்கள் இங்கு அனுப்பி வைக்கப்பட்டு திருத்தப்பட்டது.புதுச்சேரி விடைத்தாள் மையம் செயல்பட்டது, புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ்- 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி, 19 ம் தேதி தேர்வு முடிகிறது. அத்துடன் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகளும், மார்ச் 29ம் தேதிக்குள் முடிந்துவிடும் என்பதால், ஏப்ரல் முதல் வாரத்தில், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கி 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளில் புதுச்சேரி கல்வித் துறை இறங்கியது. ஆனால், புதுச்சேரிக்கு விடைத்தாள் மையத்தை திடீரென, தமிழக தேர்வுத்துறை ரத்து செய்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் முறையாக பிளஸ் 1 வகுப்புக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில், அந்த தேர்வு விடைத்தாள்கள் புதுச்சேரியில் திருத்தியதற்கான தொகையை, தமிழக தேர்வுத்துறை காலதாமதமாக வழங்கியதாக தெரிகிறது.இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர், புதுச்சேரி கவர்னருக்கு புகார் மனு அனுப்ப, கல்வித்துறையிடம் கவர்னர் விளக்கம் கேட்டார். அதுகுறித்து, தமிழக அரசு தேர்வுத் துறையிடம், புதுச்சேரி கல்வித்துறை காரணம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இப்பிரச்னை காரணமாக புதுச்சேரி விடைத்தாள் திருத்தம் மையம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்பது, ஆசிரியர்கள் சிலரின் புகைச்சலாக உள்ளது.இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் கள் மீண்டும், தமிழக மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்