Breaking

Wednesday, February 13, 2019

விதிகளை மதிப்போம்; விபத்தை தவிர்ப்போம்! உறுதிமொழியேற்ற பள்ளி மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
'சாலை விதிகளை கடைபிடித்து, விபத்துகளை கட்டுப்படுத்த வேண்டும்,&' என, பொள்ளாச்சி நகராட்சி பள்ளி விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் இந்திரஜித் வரவேற்றார். மேற்கு எஸ்.ஐ., சின்னகாமணன் பேசியதாவது:
சாலை விபத்துகளை கட்டுப்படுத்த, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பள்ளிக்கு வரும் போதும்; பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போதும் கவனமுடன் ரோட்டை கடக்க வேண்டும். வாகனங்கள் வருகிறதா என பார்த்துச் செல்ல வேண்டும். கவனமின்றி சாலைகளை கடக்க கூடாது; வேகமாக ஓடக்கூடாது. வாகனங்களில் செல்லும் போது, கவனமாக செல்ல வேண்டும்.
மற்ற வாகனங்களை முந்திச் செல்ல அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.பள்ளிப் பருவ வயதில் இருந்தே, சாலை விதிகளை கடைபிடிக்க துவங்கினால், மாற்றத்தை ஏற்படுத்தும். &'ெஹல்மெட்&' அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டக்கூடாது என்றும்; &'சீட் பெல்ட்&' அணியாமல் கார் இயக்க கூடாது என்றும் பெற்றோர்களிடம் அறிவுறுத்த வேண்டும். &'சிக்னல்&' பகுதியில் எப்படி ரோட்டை கடக்க வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். விபத்தில் சிக்குவதால் ஒரு குடும்பமே பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, கவனமுடன் வாகனம் ஓட்ட வேண்டும். இவ்வாறு, பேசினார். நிகழ்ச்சியில், &'போக்குவரத்து விதிகளை கடைபிடிப்போம்; விபத்துகளை தவிர்ப்போம்,&' என மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog