Breaking

Tuesday, February 12, 2019

அமைச்சர் செங்கோட்டையன் உறுதி: ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் பார்வைத்திறன் குறைபாடுடைய 239 பேர் நியமனம்: மாண்புமிகு அமைச்சர் செங்கோட்டையன்


2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை தொடங்கியது. 2019-20ம் ஆண்டின் பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் திருப்பூர் வடக்கு தொகுதி MLA விஜயகுமார் எழுப்பிய கேள்விக்கு உயர் கல்விதுறை அமைச்சர் அன்பழகன் பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அமைச்ர் உயர் கல்வியில் 1,585 புதிய பாடப்பிரிவுகள்

தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் திருப்பூர் வடக்கு பகுதியில் புதிய அரசு மகளிர் கல்லூரி உருவாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார். இந்த ஆட்சியில் 65 புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி(திமுக) துணை கேள்வி எழுப்பி பேசியதாவது: பார்வை திறன் குறைபாடுகளுடைய மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுகின்ற அந்த நிலை இல்லாமல், தலைவர் கலைஞர் முதல்வராக இருந்த போது எப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு சீனியாரிட்டி அடிப்படையில் வேலையை வழங்கினாரோ, அது போல் வேலையினை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா?. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தவர்களுக்கெல்லாம் தகுதி தேர்வு வைப்பதன் மூலமாக பல பேருக்கு வேலை கிடைக்காத நிலை இருக்கிறது. ஆகவே எப்படி சீனியாரிட்டி அடிப்படையில் வேலை கொடுத்தோமோ, அந்த மாதிரி வேலை கொடுத்தால் எல்லா பள்ளிக்கூடத்துக்கும் ஆசிரியர்கள் நிரப்பப்படுவார்கள். அதை மாற்றுவதற்கு அந்த முறையை அரசு கொண்டு வருமா? அதுவும் அந்த பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
செங்கோட்டையன்: ஆசிரியர்கள் சில இடங்களில் இல்லை என்று உறுப்பினர் கூறியுள்ளார். பல மாவட்டங்களில் அந்த குறைபாடுகள் எங்களுக்கு தெரியும். அதற்காக ரூ.7500 சம்பளத்தில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலமாக அங்கே ஆசிரியர்களை நிரப்பலாம். அதன் பிறகு ஆசிரியர்களை தேர்வு செய்த பிறகு படிப்படியாக அந்த பணியிடங்களை நிரப்பலாம் என்று அரசு ஆணையிட்டது. அதற்காக உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது. ஆகவே அந்த வழக்கு முடிந்தவுடன் ரூ.7500 சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் எந்த இடத்திலும் இல்லையென்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக்கி தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது
முன்னதாக ச ட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்தவுடன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.

கூட்டம் துவங்கிய போது ஜாக்டோ-ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கையை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று திமுக கூறியுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றார் தங்கம் தென்னரசு.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அரசு கோரிக்கையை ஏற்கவில்லை என்றார். மேற்குவங்கம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். புதிய பென்சன் திட்டத்திற்கு ஒப்பு கொண்டு தான் புதிய ஊழியர்கள் பணிக்கு சேர்ந்ததாக குறிப்பிட்டார்

மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog