Breaking

Saturday, February 09, 2019

வேலை தர்றோம் வாங்க! அழைக்கிறது வேலைவாய்ப்பு அலுவலகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
ஒரு பக்கம் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்று எதிர்க்கட்சிகள் கூப்பாடு போட்டு வரும் நிலையில், மறுபுறம் &'எங்களிடம் வாருங்கள்; நாங்கள் வேலை தருகிறோம்&' என்று தனியார் நிறுவனங்கள் அழைக்கின்றன; உரிய பயிற்சி இல்லாததால், சேரத்தான் ஆளில்லை. வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில், அரசு வேலைக்கு ஆட்தேர்வு செய்த காலம் மாறி, இப்போது, அரசு பணியாளர் தேர்வாணயமான டி.என்.பி.எஸ்.சி., போட்டித்தேர்வு மூலமே, ஆட்தேர்வு நடக்கிறது.
இதனால், வேலை தேடுவோரை, போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் பணியில் வேலைவாய்ப்பு அலுவலகம் ஈடுபட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், மாதிரி நேர்காணல் நடத்தவும், வேலைவாய்ப்புத்துறை ஏற்பாடு செய்கிறது. இதுதவிர, தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கவும், நடவடிக்கை எடுக்கின்றனர். இதற்கென மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இலவசமாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. கடந்தாண்டு கோவையில் நடந்த இலவச வேலைவாய்ப்பு முகாமில், 994 நிறுவனத்தினர் பங்கேற்றனர். மொத்தம், 25,330 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டது. இவற்றில் பணி வாய்ப்பு பெற, 9,606 பேர் நேர்காணலுக்கு வந்திருந்தனர். முடிவில், 3,232 பேருக்குதான் வேலை கிடைத்தது. பட்டப்படிப்பு படித்தவர்கள் முதல், பள்ளிப்படிப்பு முடித்தவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., படித்தவர்கள் என பல்வேறு தகுதி உடையவர்களை தேடி, தனியார் நிறுவனத்தினர் முகாமுக்கு வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு, போதுமான அளவு திறன் வாய்ந்த ஆட்கள் கிடைப்பதில்லை. மாவட்ட வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் ஜோதிமணி கூறுகையில்,&'&'ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறையில் வேலை பெறுவதற்கான முகாம் நடக்கிறது.
'குறைந்தது, 20 முதல் 30 தனியார் நிறுவனங்கள் வரை, ஆட்தேர்வுக்கு வருகின்றனர். &'நேர்காணலில் தேர்வு செய்யப்படுவோருக்கு, உடனுக்குடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஒரு சிலர், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனத்தால் தேர்வு செய்யப்படுகின்றனர். திறன் மிகுந்த பணியாளர்கள் கிடைப்பதில்லை என்பதுதான் குறைபாடாக உள்ளது,&'&' என்றார். பணியாளர்கள் திறன் வளர்ப்புக்கும், பயிற்சி அளிக்கிறது வேலை வாய்ப்புத்துறை. பயன் படுத்திக்கொள்ளத்தான் பலரிடம் ஆர்வமில்லை! மாவட்டத்தில் 2,25,875 பேர் பதிவு! கோவை மாவட்டத்தில், பட்டதாரிகள் முதல், பள்ளிப்படிப்பு முடித்தவர்கள் வரை, 2,25,875 பேர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களில், 1,01,060 பேர் ஆண்கள்; 1,24,815 பேர் பெண்கள்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog