👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
சென்னை பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையுடன் (டிபார்ட்மெண்ட் ஆப் கிரிமினாலஜி) இணைந்து ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் ‘நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சி மற்றும் அதற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள்’ குறித்த சர்வதேச கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் சமூகவியல் துறையால் இரண்டு நாட்களுக்கு 6 அமர்வுகளாக நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளை சார்ந்த சிறந்த பேச்சாளர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
குற்றவியல் படிப்பில் டாக்டர் பட்டம் பெற்றவரும், ஐக்கிய நாடுகளின் சபையில் மூத்த ஆலோசகராகவும் இருக்கும் டாக்டர்.ஸ்லாவோமிர் ரீடு சிறப்பு விருந்தினராக இருந்து கருத்தரங்கை வழி நடத்தினார். இந்த மாநாட்டில் ‘காலநிலை மாற்றம், பொருளாதார சமத்துவமின்மை மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் ஆகியவற்றைச் சமாளித்து நிலையான வளர்ச்சியை அடைவது’ என்பது கருப்பொருளாக வைக்கப்பட்டிருந்தது. இதை அறிமுகப்படுத்தியதோடு ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு ஒரு புத்தகத்தையும் சிறப்பு விருந்தினரான ஸ்லாவோமிர் வழங்கினார்.
மேலும் அவர் “நாம் ஏற்கனவே சுற்றுச்சூழலை அழிவில் இருந்து காப்பாற்றுவதில் காலம் தாழ்த்திவிட்டோம், உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்