Breaking

Friday, February 08, 2019

வந்தே மாதரம் பாட மறுத்த ஆசிரியர் மீது தாக்குதல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
கடிஹார்: பீஹார் மாநிலத்தில், &'வந்தே மாதரம்&' தேச பக்தி பாடலை பாட மறுத்த ஆசிரியரை தாக்கிய கிராம மக்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, கடிஹார் மாவட்டத்தில், அரசு ஆரம்ப பள்ளியில், ஆசிரியராக பணிபுரியும், அப்சல் ஹுசைன், பொறுப்பு தலைமை ஆசிரியராகவும் உள்ளார். சமீபத்தில்,குடியரசு தின விழாவின்போது, வந்தே மாதரம் பாடலை பாட, ஆசிரியர் அப்சல் ஹுசைன் மறுப்பு தெரிவித்தார்.
இதுகுறித்து, சமூக வலைதளத்தில், அவர் வெளியிட்ட வீடியோவில், &'இஸ்லாமிய மதத்தில், வந்தே மாதரம் கூறுவதற்கு தடை உள்ளது. &'வந்தே மாதரம் பாடலை பாடுவது கட்டாயம் என, அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்படவில்லை&' என, குறிப்பிட்டிருந்தார்.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பள்ளிக்குள் நுழைந்து, ஆசிரியரை தாக்கியதுடன், &'அவர் மீது, கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என, கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த, மாநில கல்வித் துறை அமைச்சர் கிருஷ்ண நந்தன் வர்மா, &'&'தேச பக்தி பாடலை அவமதித்த ஆசிரியரை மன்னிக்க முடியாது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog