Breaking

Friday, February 08, 2019

தமிழக பட்ஜெட் 2019ல் கல்வித் துறை பெற்றுள்ள நிதி ஒதுக்கீடுகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
தமிழ் நாட்டின் 2019 மற்றும் 2020ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார், இதில் மாநிலத்தின் கல்வி துறை மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடுகளும், சில சிறப்பு திட்டங்களும் இடம் பெற்றுள்ளன.
தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ரூ.28,757.62 கோடியும், உயர்கல்வித் துறைக்கு ரூ.4,584 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் ஏழை மாணவர்களின் கல்வி கனவை மெய்ப்பிக்கும் திட்டமான சத்துணவு திட்டச் செலவிற்காக ரூ.1,772.12 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக அவரது பெயரில் கலை, அறிவியல் கல்லூரி ஒன்றும் நிறுவப்படும் என அறிவித்தார். சர்வதேச பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.1,072 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு. நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கு ரூ.2,791 கோடி ஒதுக்கீடு. முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்குக் கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு. தொடக்க நிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், பள்ளி செல்லா குழந்தைகளில் எண்ணிக்கை 33,519 ஆகக் குறைந்துள்ளதாகவும் நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog