👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
போலீஸ், தீ விபத்து போன்ற அவசர சேவைக்கு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 112 என்ற தொலைபேசி எண்ணின் பயன்பாடு, தமிழகம், புதுச்சேரி உட்பட 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நேற்று முதல் தொடங்கியது.
தேசிய அளவில் அனைத்து அவசர உதவிகளுக்கும் அழைக்க, ‘112’ என்ற அவசர உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இமாசலப் பிரதேசம், நாகலாந்தில் சில நாட்களுக்கு முன் இந்த எண் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து இந்த எண்ணின் சேவை 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று தொடங்கப்பட்டது.
இதன் மூலம், போலீஸ் உதவி எண் 100, தீ விபத்து குறித்து தெரிவிக்க அழைக்கப்படும் 101, பெண்கள் உதவிக்கான 1090 ஆகிய எண்கள், இந்த ஒரே எண்ணில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
இனி 112 என்ற உதவி எண்ணை அழைப்பதன் மூலமாக மேற்கூறிய அனைத்து அவசரகால உதவிகளையும் பெறமுடியும்.
இந்த எண்ணுடன் விரைவில் அவசர மருத்துவ உதவிக்கான 108 எண்ணும் சேர்க்கப்பட உள்ளது. டெல்லியில் இந்த திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
ஆந்திரா, உத்தரகண்ட், பஞ்சாப், கேரளா, மபி,ராஜஸ்தான், உபி, தமிழ்நாடு, தெலங்கானா, குஜராத், புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான், தாதர் மற்றும் நாகர்ஹவேளி, டாமன் மற்றும் டையூ ஜம்மு மற்றும் காஷ்மீரில் அவசர உதவி எண் 112 பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது.
இப்படியும் செய்யலாம்
அவசர உதவிகளை பெறுவதற்கு தொலைபேசியில் இருந்து 112 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது ஸ்மார்ட் போன்களில் பவர் பட்டனை 3 முறை விரைவாக அழுத்தினாலோ, சாதாரண போன்களில் 5 அல்லது 9 என்ற எண்ணை நீண்ட நேரம் அழுத்தினாலோ அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை உடனடியாக பெறலாம்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்