👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
தமிழகத்திலேயே முதன் முறையாக தர்மபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டி அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகளை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று காலை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி, முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். எல்.கே.ஜி. வகுப்புக்கு குழந்தைகள் சேர்க்கப்பட்டனர் இது தவிர மாவட்ட முழுவதும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இது குறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய-நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் 72 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
தர்மபுரி ஒன்றியத்தில் ராஜாதோப்பு, குண்டலப்பட்டி, புளியம்பட்டி, ஆட்டுக்காரம்பட்டி, ஆலிவாயன்கொட்டாய், சிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் குமாரசாமிபேட்டை, 4வது வார்டு சாலை விநாயகர் கோவில் தெரு, சந்தைப்பேட்டை, நகராட்சி நடுநிலைப்பள்ளிகள் என 9 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
நல்லம்பள்ளி ஒன்றியத்தில் தேங்காமரத்துப்பட்டி, கமலநத்தம், ஓமல்நத்தம், காளேகவுண்டனூர், ஏறுபள்ளி, நெக்குந்தி, இ.கே.புதூர், மேல்பூரிக்கல், பாப்பம்பட்டி மற்றும் சோளியானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 10 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பென்னாகரம் ஒன்றியத்தில் மஞ்சாரஅள்ளி, நல்லாம்பட்டி, திகிலோடு, நாகமரை, பளிஞ்சரஅள்ளி, அஞ்சேஅள்ளி, ஏ.எட்டியாம்பட்டி, வேலம்பட்டி, கிட்டனஅள்ளி, சிட்லகாரம்பட்டி, வத்தல்பட்டி, கோடிஅள்ளி (ஜக்கம்பட்டி ), நாகனூர், மற்றும் வெள்ளமண்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 14 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பாலக்கோடு ஒன்றியத்தில் சிங்காடு, மேல்சந்திராபுரம், பாலக்கோடு உருது மற்றும் திருமல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 4 பள்ளிகளிலும், காரிமங்கலம் ஒன்றியத்தில் ஜம்பூத், அடிலம், கெரகோடஅள்ளி, பல்லேனஅள்ளி, சொன்னம்பட்டி, குண்டலஅள்ளி, கெங்குசெட்டிப்பட்டி, நாகணம்பட்டி, கொல்லப்பட்டி, கதிரம்பட்டி மற்றும் அ.முருகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 11 பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மொரப்பூர் ஒன்றியத்தில் அஸ்தகிரியூர், புளியம்பட்டி, அம்பாலப்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கெலவல்லி, கொங்கரப்பட்டி, தாளநத்தம், குண்டலப்பட்டி, சுங்கரஅள்ளி மற்றும் ராணிமூக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 10 பள்ளிகள், அரூர் ஒன்றியத்தில் எருமியாம்பட்டி, கொங்கவேம்பு, பாப்பநாயக்கன் வலசை, அ.ஈச்சம்பாடி, நாச்சினாம்பட்டி, கணபதிப்பட்டி, வள்ளிமதுரை, சூரநத்தம், ஆண்டியூர், கீழானூர், கொக்கராப்பட்டி, மற்றும் அச்சல்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என 12 பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் பாப்பம்பாடி மற்றும் குண்டலமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் 2 என தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 72 பள்ளிகளில் இன்று முதல் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை மேற்காணும் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளில் சேர்க்கை செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்