ஜே.இ.இ., மெய்ன்ஸ் - நேரம் நிர்வகித்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

ஜே.இ.இ., மெய்ன்ஸ் - நேரம் நிர்வகித்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
தேர்வுகள் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் தற்சமயத்தில் ஒவ்வொரு மாணவரும் தேர்வு நேரத்தை எவ்வாறு திறமையாக நிர்வகிக்க வேண்டும் என்கிற குறிப்புகளை அறிந்துகொள்ள வேண்டும். தேர்வு நேரத்தில் சரியான விடையை எழுதுவது மட்டுமின்றி எவ்வளவு விரைவாகவும், துல்லியமாகவும் வினாக்களுக்கு பதிலளிக்கிறோம் என்பதும் முக்கியமாகும்.
ஜே.இ.இ., மெய்ன்ஸ் எதிர்ப்பார்ப்புகள்: ஜே.இ.இ., தேர்வானது மூன்று முக்கிய பிரிவுகளை உள்ளடக்கியது, அதற்கான விடைகளை எழுத தேர்வர்களுக்கு மூன்று மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படுகிறது.ஒரு பிரிவிற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் நேரம் எடுத்துக்கொள்ளாமல் அனைத்து கேள்விகளுக்கும் மாணவர்கள் தங்களது பதில்களை அளிக்க வேண்டும்.மொத்தமாக 90 வினாக்கள் இருப்பதால் ஒரு வினாவிற்கு 2 நிமிடங்களை ஒதுக்குவதன் மூலம் மொத்தம் 180 நிமிடங்களில் அதாவது 3 மணி நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கலாம்.ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். மேலே குறிப்பிட்ட குறிப்புகள் அனைத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜன்சியால் வடிவமைக்கப்பட்டது. பாடப்பிரிவு கேள்விகள் மதிப்பெண் நெகடிவ் மார்கிங் கால அவகாசம் இயற்பியல் 30 120 ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும் 3 மணி நேரம் வேதியியல் 30 120 கணிதம் 30 120 தேர்வு அமைப்பு மற்றும் கால அளவு இதுதான் இப்போது கொடுக்கப்பட்டுள்ள இந்த நேரத்தை நிர்வகிக்கும் முறைகளை பார்ப்போம்.
1. கடைசி நேரத்திற்கான குறிப்புகளை தயாரித்தல் தேர்வு நெருங்கும் சமயத்தில் ஒரு கையேடு உருவாக்கி அதில் முக்கியமான பார்முலாக்கள், கிராப், சமன்பாடுகள் மற்றும் கோட்பாடுகளை எழுதி வைத்து கொள்ளுங்கள். வரைவிலக்கணத்திற்கு தனியாக ஒரு நோட்டு தயாரித்து கொள்ள வேண்டும். இந்த யுத்தியானது தேர்வின் போது நேரத்தையும், சக்தியையும் சேமிக்க உதவும். மேலும் தேர்வின் போது பெரிதும் உதவியாக இருக்கும். 2. ஒரு வினாவிற்கு 2 நிமிடம் எடுத்துக் கொள்ளுதல் மாதிரி தேர்வுகளை எழுதும் பயிற்சி காலத்திலேயே ஒவ்வொரு கேள்விக்கும் எத்தனை மணி நேரம் எடுத்துக்கொள்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். வினாக்களுக்கு சரியான விடை அளிப்பது மட்டுமின்றி அனைத்து வினாக்களையும் எழுத வேண்டும். 3. முக்கிய தலைப்புகளை இலக்காக வைப்பது: முழு பாடத்தை முடிக்கவில்லையா? குறைந்தது ஒவ்வொரு பாடத்திலும் உள்ள முக்கிய தலைப்புகளையாவது படிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து படித்தால் அதைப் பற்றிய கவலை சிறிதும் வேண்டாம்.
முக்கிய தலைப்புகள்: இயற்பியல்: தலைப்புகள் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் டைமன்ஷ்னல் அனலிசிஸ் 1 - 3 கிராவிடேஷன் 3 - 4 எலக்ட்ரோ ஸ்டாடிக்ஸ் 4 கரண்ட் எலக்ட்ரிசிட்டி 3 எலக்ட்ரோ மேக்னடிக் இண்டக்‌ஷன் 2- 3 வேவ்ஸ் அண்ட் சவுண்ட்ஸ் 3 ஆப்டிக்ஸ் 2 ஹீட் அண்ட் தெர்மோடைனமிக்ஸ் 4 கைனடிக் தியரி ஆப் காஸஸ் 2 வேதியியல்: தலைப்புகள் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் கெமிக்கல் பாண்டிங் அண்ட் தி பிரியாடிக் டேபில் 4 - 5 ஆர்கானிக் காம்பௌண்ட்ஸ் கண்டெய்னிங் ஆக்ஸிஜன் 3 கெமிஸ்ட்ரி ஆப் என்விரான்மெண்ட் அண்ட் எவ்ரிடே லைப் 2 ரெடாக்ஸ் ரியாக்‌ஷன்ஸ் 2 மோல் கான்சப்ட் 1 சொல்யூஷன்ஸ் 2 தெர்மோகிமிஸ்ட்ரி 2 இக்லிபிரியம் 4 கணிதம்: தலைப்புகள் எதிர்பார்க்கப்படும் கேள்விகள் கோ-ஆர்டினேட் ஜியாமெட்ரி 3 டிப்ரன்ஷியல் கால்குலஸ் 7 இண்டக்ரல் கால்குலஸ் 4 மாட்ரிக்ஸ் அண்ட் டிடர்மினட்ஸ் 2 டிரிக்னாமெட்ரி 2 பிராபப்லிட்டி 2 பாடப்பிரிவு வாரியான நேரம் நிர்வகித்தல்: இயற்பியல்:கருத்துகள் மற்றும் எண்ணியலில் அதிகம் கவனம் செலுத்துதல்.
சமன்பாடுகளை பயன்படுத்தி சரியான கோட்பாடுகளை பயிற்சி செய்தல்.கடினமான பாடத்தை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்தல்.கடந்த ஆண்டு வினாத்தாள்களை எழுதுவதன் மூலம் தேர்வு குறித்த புரிதலும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.கடினமான கேள்விகளுக்கு 2.5 நிமிடங்கள் நேரமும் எளிய கேள்விகளுக்கு 1.5 நிமிடங்கள் நேரமும் எடுத்துக்கொள்ள வேண்டும். வேதியியல்:பிசிக்கல் கெமிஸ்ட்ரியை பொறுத்த வரை முக்கியமான விதிமுறைகளையும், பார்முலாக்களையும் நன்கு படிக்க வேண்டும்.ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் குறிப்புகளை தயாரித்து அதை தேர்விற்கு முன் படியுங்கள்.இன் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் என்.சி.இ.ஆர்.டி., புத்தகங்களை படிப்பதன் மூலம் அதிக மதிப்பெண்களை எடுக்கலாம். கணிதம்:பார்முலாகளுக்கென தனி புத்தகத்தை தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.ஒரே மாதிரியான கேள்விகளை பயிற்சி செய்வதை விட வெவ்வேறு முறையிலான கேள்விகளை பயிற்சி செய்து பாருங்கள்.
இண்டக்ரேஷன், டிப்ரன்சியேஷன், டிரிக்னாமெட்ரி மற்றும் கோ-ஆர்டினேட் ஜியாமட்ரியில் அதிகம் கவனம் செலுத்துங்கள். ஜே.இ.இ., தேர்வுகளுக்கான பல மொபைல் ஆப்களும் உள்ளன அவைகளை பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் பயிற்சிகளை மேற்கொள்வது நல்ல மதிப்பெண்களை பெற்றுத்தரும். வாழ்த்துக்கள்!
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews