👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
கல்வியியலுக்கான, 301 கல்லுாரிகள், முதல்வர்கள் இல்லாமல் இயங்குவதை, பல்கலை கண்டறிந்துள்ளது. இவற்றில், 45 நாட்களில் முதல்வரை நியமிக்க, 'கெடு' விதிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்தில், பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லுாரிகள் செயல் படுகின்றன.
தமிழகத்தில் செயல்படும் கல்லுாரிகள், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பை பெற்றுள்ளன
இந்த கல்லுாரிகளை கண்காணிப்பது, விதிகளை பின்பற்றுவது, உரிய கல்வி தரத்துடன் ஆசிரியர்களை நியமிப்பது, தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்குவது போன்ற பணிகளை, கல்வியியல் பல்கலை மேற்கொள்கிறது. இந்நிலையில், பல கல்லுாரிகள், உரிய கல்வித்தகுதி உள்ள பேராசிரியர்கள் மற்றும் போதிய ஊழியர்கள் இல்லாமல் செயல்படுவது தெரியவந்துள்ளது.
அதேபோல, பல கல்லுாரிகளில் பகுதி நேர மாணவர்களை, 'ரெகுலர்' வகுப்பு மாணவர்கள் போன்றும், கணக்கு காட்டியுள்ளனர். இதுபற்றி, பல்கலைக்கு புகார்கள் வந்ததால், சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல்கலை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில், 301 கல்லுாரிகள் முதல்வர் இல்லாமல் இயங்குவதும் தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுப்பியுள்ள எச்சரிக்கை கடிதம். எந்த கல்லுாரியும், முதல்வர்கள் இல்லாமலோ, உரிய ஆசிரியர்கள் இல்லாமலோ இயங்கக்கூடாது
இது, அங்கீகார விதியை மீறும் செயல். முதல்வராக நியமிக்கப்படுபவர், குறைந்த பட்சம், இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதேபோல, கல்வி ஆண்டின் இடையில், ஆசிரியரோ, முதல்வரோ பணியிலிருந்து விலகவோ, நீக்கப்படவோ கூடாது. எனவே, 301 கல்லுாரிகளும், 45 நாட்களில் முதல்வர்களை நியமித்து, பல்கலைக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்