'நீட்' தேர்வு குறித்த, மாணவர் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக சி.பி.எஸ்.இ., தெரிவித்துஉள்ளது.மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி வருகிறது.
இந்த தேர்வு தொடர்பாக, பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் மாணவர் விபரங்கள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளித்து, சி.பி.எஸ்.இ.,யின் நீட் தேர்வு இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும், 13.26 லட்சம் மாணவர்கள்நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெயர், அலைபேசி எண், இ - மெயில் முகவரி, அவர்களின் சுயவிபரங்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் மிகவும் பத்திரமாக, பாதுகாக்கப்பட்ட தொழில் நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ளன.நீட் தேர்வு முடிவுகள், மாணவர்களின் பதிவு எண் அடிப்படையில்மத்திய அரசின், தேசிய தகவல் மையத்தின் வழியாக வெளியிடப்பட்டன.
அதன்பின், மாணவர்களின் விபரங்கள், அந்தந்த மாநில சுகாதாரத் துறைக்கு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்துவதற்காக ரகசிய குறியீட்டு எண் அடிப்படையில் வழங்கப்பட்டு உள்ளன. எனவே சி.பி.எஸ்.இ.,யில் இருந்து, எந்த மாணவரின் தகவலும் 'லீக்' ஆகவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.