''மத்திய அரசின், எத்தகைய தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், புதிய பாடத்திட்டம் அமையவிருக்கிறது,'' என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அரசு பள்ளி கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், ஈரோடு மாவட்டம், கோபியில், 2,500 மாணவர்களுக்கு, தணிக்கையாளர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.மத்திய அரசின் ஜி.எஸ்.டி., புதிய வரி திட்டத்தின் மூலம், தமிழகத்தில், தகுதி வாய்ந்த தணிக்கையாளர்கள் தேவைப்படுகின்றனர்.
அடுத்தாண்டு முதல், ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு, புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. அலைபேசி, ஸ்மார்ட் கணினிகளிலும் பாட திட்டங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மத்திய அரசின் எத்தகைய தேர்வுகளையும், மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். அனைத்து அரசு பள்ளிகளிலும், ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினர்
'அரசு பள்ளிகளில், பல வண்ண சீருடைகள் வழங்கப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார். தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை மாற்ற, அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி, 9, 10ம் வகுப்புகளுக்கு, ஒரு வகை நிறத்திலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வேறு வகையான நிறத்திலும், சீருடைகளின் நிறம் மற்றும் உடை வடிவங்கள் மாற்றப்பட்டு உள்ளன. அதேபோல், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், இந்த ஆண்டு, பச்சை நிறத்தில் சீருடைகள் மாற்றப்பட்டன. இந்நிலையில், மீண்டும் சீருடைகள் மாற்றப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தற்போதுள்ள சீருடை, ஒரே வண்ணத்தில்உள்ளதால், அவற்றுக்கும், தனியார் பள்ளி சீருடைக்கும் இடையே, பெரும் வித்தியாசம் உள்ளது. இந்த வித்தியாசம் தெரியாத வகையில், பல வண்ணங்களில் இருக்குமாறு, சீருடைகள் மாற்றப்படும். வரும் கல்வி ஆண்டில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சீருடைகள் மாற்றப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.