மாணவர்களின் ஆங்கில வாசிப்புத்திறன் வளர்வதற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்க புத்தக வெளியீட்டு விழா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 07, 2018

Comments:0

மாணவர்களின் ஆங்கில வாசிப்புத்திறன் வளர்வதற்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்க புத்தக வெளியீட்டு விழா



🌹புத்தக வெளியீட்டு விழா🌹

👉07.07.2018 அன்று காலை 10.00 மணியளவில் திருச்சிராப்பள்ளயில் உள்ள தூய வளனார் கல்லூரி வளாகத்ததில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

 👉திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அனுமதியுடன் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திரு.சுகுமார் தலைமையாசிரியர் வரவேற்புரையாற்றினார்.


👉மணிகண்டம் வட்டாரக்கல்வி அலுவலர் திரு.கா.மருதநாயகம் நூலினை வெளியிட்டு சிறப்புரையும், கலவைச்சோறு அமைப்பின் நிறுவனர் திரு.எபி.மனோ அவர்கள் பெற்றுக்கொண்டு நூலினைப்பற்றிய கருத்துரையும் வழங்கி சிறப்பித்தார்கள்.

👉இறுதியாக நன்றியுரை நூலாசிரியர்  திரு.கு.செல்வக்குமார் வழங்கினார். 

👉பின்பு இந்நூல் வெளியீட்டு விழாவின் நோக்கம் மாணவர்களின் ஆங்கில வாசிப்புத்திறன் வளர்வதற்கு நூலினை வெளியிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கவேண்டும் என்பதே. 

👉விடுமுறை நாளில் தன்னார்வமாக சுமார் 400க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருமக்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 16 ஒன்றியங்களிலிருந்தும், கரூர்,ஈரோடு,அரியலூர், பெரம்பலூர்,புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்தும் கலந்து கொண்டு அரங்கமே அதிர்ந்தது.


👉இந்த நூலானது எளிமையாக உரிய ஒலிப்புமுறையுடன், மாணவர்கள புரிந்து கொள்ளும்படியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 

👉எந்தவிதமான கட்டணமும் இன்றி சேவை மனப்பான்மையுடன் ஏற்பாடு செய்து இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறன் உயரவேண்டும் என்பதே ஆகும். ஆசிரியர்களுக்கு முழுமையான நேரடியான பயிற்சியானது,திரு.ஸ்டனிஸ் ரத்தினம் மற்றும் திரு.கு.செல்வக்குமார் அவர்களால் வழங்கப்பட்டது.

👉விழா மற்றும் பயிற்சி ஏற்பாடுகளை திரு.ரூஸ்வெல்ட் செய்திருந்தார்.

 👉அனைத்து ஆசிரியப்பெருமக்களும் இதனை மாணவர்களுக்கு கொண்டு சென்று மாணவர்கள் ஆங்கில மொழியை செப்டம்பர் மாதத்திற்குள் தங்களது பள்ளியில் சாதிப்போம் என்கிற உறுதிமொழியுடன் இனிதே விழா நிறைவுற்றது.

👉வரலாற்று சாதனையாய், மிகப் பெரிய அளவில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியுடன் சென்றது மனநிறைவுடன் இருந்தது. 

👉எங்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தப் புத்தகம் இலாப நோக்கம் இல்லாமல் உற்பத்தி விலையில் மட்டுமே வழங்கப்படும். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்

இவண்
கு. செல்வக்குமார் இ.நி.ஆ, 
ஊ.ஒ.தொ.பள்ளி கோட்டைப்பளுவஞ்சி,
மருங்காபுரி ஒன்றியம்,
 திருச்சிராப்பள்ளி மாவட்டம்,
 8122440081


👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews