தமிழகத்தில் ‘இளம்படைப்பாளர் விருது’க்கான போட்டி ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் நடத்த பொதுநூலக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நூலகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் சிந்தனை திறன், பேச்சாற்றல், எழுத்தாற்றலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி நடத்த வேண்டும். இதில் ஒவ்வொரு போட்டியிலும் 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒருபிரிவும், 9 முதல் 12ம் வகுப்பு வரை ஒரு பிரிவும் பங்கேற்கலாம்
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு பள்ளியிலிருந்து ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் போட்டியில் பங்கேற்பவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதி கடிதம் பெற்றிருக்க வேண்டும். தாலுகா அளவிலான ஏதேனும் ஒரு பள்ளியில் போட்டி நடத்த வேண்டும். தமிழ்புலமை கொண்டவர்களை கொண்டு தேர்வு குழு அமைக்க வேண்டும் தாலுகா அளவில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்றவர்களை தேர்தெடுத்து மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்த வேண்டும் ஒவ்வொரு போட்டியிலும் 3 இடங்களை பெற்றவர்களை தேர்வு செய்து மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற 18 மாணவர்களுக்கு இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும்
இதில் பேச்சுப்போட்டி: ‘வாழ்விற்கு உயர்வு தருவது வாசிப்பே’.
கட்டுரைப்போட்டி: ‘வாசித்தேன் வளர்ந்தேன்’. கவிதைப்போட்டி: ‘என் எதிர்காலம் என்கையில்’ ஆகிய தலைப்புகளில் நடத்த வேண்டும் இந்த தலைப்புகளில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நூலகர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் போட்டிகள் நடத்தி முடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.