தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று துவங்கியது. இது குறித்து கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வுக் கூட்டம் (Counseling) 25.07.2018 அன்று வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலியில் உள்ள நான்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 306 இடங்களுக்கு, 12107 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில், 10289 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்ததாக தெரிவு செய்யப்பட்டன. சிறப்பு பிரிவினருக்கும் +2ல் தொழிற்கல்வி பயின்றோருக்கும் நிரப்பப்பட்ட இடங்கள் போக மீதமுள்ள 269 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள 824 கலையியற் பிரிவு (Academic Stream) மாணவ / மாணவிகளுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவர்களில் 466 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை பராமரிப்புத்துறை, ராணுவம், ஆவின் போன்ற மாநில மற்றும் மத்திய அரசுத்துறைகளிலும், தனியார் பண்ணை நிறுவனங்கள், இறைச்சி நிறுவனம், கால்நடை தீவன தொழிற்சாலைகள், மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், வங்கிகள் மற்றும் காப்பீட்டுத்துறைகள், கால்நடை மற்றும் கோழி பண்ணைகள், உயிரியல் பூங்கா மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகங்களிலும் பணிபுரிய வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் முதுகலை பட்டம் போன்ற மேற்படிப்புகளும் படிக்கமுடியும் அல்லது சொந்தமாக தொழிலும் தொடங்க முடியும். மேலும் நிர்வாகத்துறைகளிலும் பணிபுரிய முடியும். கால்நடை தொழில் வணிகமயமாக்கல் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக, உணவு உற்பத்தி, மருந்து, நோய்கண்டறிதல் மற்றும் தடுப்பூசி உற்பத்தி போன்ற துறைகளிலும் கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் நிறைய உள்ளன.
முதல் பதினான்கு இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை. கே. ராதாகிருஷ்ணன், சேர்க்கை ஙஆணைகளை வழங்கி தலைமையுரையாற்றினார். கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறையின் அரசு முதன்மை செயலர். கே. கோபால், வாழ்த்துரை வழங்கினார்கள்.kaninikkalvi.blogspot.com
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சி. பாலச்சந்திரன், வரவேற்புரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் மா. திருநாவுக்கரசு அவர்கள் நன்றியுரை வழங்கினார். கலந்தாய்வில் பங்கேற்றோரில், கீழ்க்கண்ட மாணவ / மாணவிகள் முதல் பதினான்கு இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு அமைச்சர் அவர்கள் சேர்க்கை ஆணையை வழங்கினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.