புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடியில் இயங்கும் அரசுப்பள்ளி நவீன மற்றும் உயர்தர தொழில்நுட்ப வசதிகளுடன் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறது.
பல சிறப்பம்சங்களுடன் மற்ற அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக இந்த பள்ளி திகழ்கிறது. குளிர்சாதன வசதிக் கொண்ட வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள், இணையதள வசதிக்கொண்ட டிஜிட்டல் டிவி உதவியுடன் கற்பித்தல் என அனைவரையும் ஆச்சரியத்தில் இந்த அரசுப் பள்ளி ஆழ்த்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மாங்குடியில் இயங்கும் இந்த பள்ளி மற்ற அரசுப் பள்ளிகளை போல சாதாரணமாக இயங்கி வந்தது. ஊர் பொதுமக்கள் மற்றும் நல்ல பணியில் உள்ள முன்னாள் மாணவர்களின் உதவியால் இன்று நவீன டிஜிட்டல் பள்ளியாக மாறியுள்ளது.
தினமும் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை படிக்கவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் கருவி மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படுகின்றன. இது மட்டுமின்றி வீட்டு பாடத்தை ஏட்டில் எழுதிக் கொண்டு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் வீட்டு பாடத்தை புகைப்படம் எடுத்து மின் அஞ்சல் செலுத்தினால் போதும் என்றும் ஆசிரியர்கள் கூறியுள்ளனர். அரசுப் பள்ளிகளில் இவ்வளவு வசதிகள் இருப்பதால் ஆண்டுதோறும் சில நாட்களிலேயே மாணவர் சேர்க்கை முடிவடைவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.