2009 & TET இடைநிலை ஆசிரியர்களின் கவனத்திற்கு...SSTA இயக்கத்திற்கு அழைப்பு எப்போது...??
இது குறித்து இன்று 24.07.2018 காலை ஒருநபர் ஊதியக்குழுவை தொடர்பு கொண்ட போது இன்னும் 10 நாட்களுக்குள் பள்ளிக்கல்வித்துறையைச் சார்ந்த அனைத்து இயக்கங்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
நமது இயக்கத்திற்கும் நிச்சயமாக அழைப்பு வரும் என்றே தெரிவித்துள்ளார்கள்.
ஒருநபர் ஊதியக்குழு பேச்சு வார்த்தையில் நமது இயக்கம் சார்பாக பல ஆதாரங்களை சுட்டிக்காட்டி தாக்கல் செய்வதோடு 100 % ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு SSTA வழிவகுக்கும். நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயமாக வென்றுகாட்டுவோம்.
அதே நேரத்தில் ஒருநபர் ஊதியக்குழு அறிக்கையை தாக்கல் செய்ய ஓரிரு மாதங்கள் கூடுதல் அவகாசம் ஏற்பட வாய்புள்ளதாக தெரிகிறது. வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறோம்.அதுவரை சற்று பொறுமைகாத்து வெற்றிவாகை சூட எங்கள் உயிர் தோழமைகளாகிய ஆசிரிய பெருமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது வாட்சப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒருநபர் ஊதியக்குழுவிடமிருந்து SSTA விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. இது தற்பொழுது உண்மையல்ல. அழைப்புகள் வந்தவுடன் மாநில தலைமை தங்களுக்கு முறையாக அச்செய்தியை தெரிவிக்கும்.
ஜே.ராபர்ட்
2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.