விடுதிகளில் தங்கிப் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ-மாணவியருக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.வளர்மதி சட்டப்பேரவையில் அறிவித்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப் பேரவையில் நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்
ஒரு விடுதியில் 100 மாணவ-மாணவியர் தங்கிப் படிக்கும் வகையில் 5 கல்லூரி விடுதிகள் புதிதாகத் தொடங்கப்படும். ஆறு பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும். விடுதிகளில் தங்கி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தனித் திறன் வளர்க்கும் பயிற்சி மற்றும் ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும்.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுப் பொருள்கள் அளிக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் அமைக்கப்படும். ஏழ்மை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட வயதான கிறிஸ்தவ மகளிருக்காக உதவிடும் வகையில் இந்தச் சங்கம் ஏற்படுத்தப்படும்
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ-மாணவியர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் புத்தகங்கள் அளிக்கப்படும். தமிழகத்தில் உள்ள விடுதிகளில் 21 விடுதிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டப்படும்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் விடுதிகளில் தங்கிப் படிப்போருக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.650-லிருந்து ரூ.900-ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் வளர்மதி அறிவித்தார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.