முதுநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டுக்கு, 864 இடங்கள்; அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத, 117 இடங்கள் என, மொத்தம், 981 இடங்கள் உள்ளன.தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 122 இடங்கள் உள்ளன.
இந்த படிப்புகளில் சேர, 10 ஆயிரத்து, 797 பேர் விண்ணப்பித்துள்ளனர்.அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவதை, சில மாற்றங்களுடன் செயல்படுத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தர வரிசை பட்டியலை, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டது. இதில், 10 ஆயிரத்து, 108 பேர் இடம் பெற்றுள்ளனர்
மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், இன்று துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது.
இன்று, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கும், நாளை முதல், பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கும் நடக்கிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.