இளநிலை சட்டப் படிப்புகள்: இந்த ஆண்டும் வயது உச்சவரம்பு கிடையாது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 26, 2018

Comments:0

இளநிலை சட்டப் படிப்புகள்: இந்த ஆண்டும் வயது உச்சவரம்பு கிடையாது


இளநிலை சட்டப் படிப்புகளில் சேர வயது உச்சவரம்பு எதுவும் இல்லை என்பதால், இந்த ஆண்டும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த மற்றும் 3 ஆண்டுகள் சட்டப் படிப்புகளில் எந்த வயதினரும் சேர முடியும் என்ற நிலை தொடர்வதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகள், சென்னையில் சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஆற்றல்சார் பள்ளி ஆகியவற்றில் வழங்கப்படும் பிளஸ் 2 முடித்தவர்களுக்கான 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கான 3 ஆண்டுகள் சட்டப் படிப்புகள் ஆகிய இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

201819ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு மற்றும் விண்ணப்ப விநியோக விவரங்களை பல்கலைக்கழகம் சனிக்கிழமை (மே 26) அறிவிக்க உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இளநிலை சட்டப் படிப்புகளில் சேர வயது உச்சவரம்பு எதுவும் கிடையாது என பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூறினர். 

வயது உச்ச வரம்பு நீக்கம்: தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 20, மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், பிற மாநிலங்களில் சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு இல்லாமல் இருந்தது.kaninikkalvi.blogspot.in
இந்த நிலையில், பிற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் வயது உச்ச வரம்பு தளர்த்தப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பை தளர்வு செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.kaninikkalvi.blogspot.in
இதனால், தொடர்ந்து 201516ஆம் கல்வியாண்டிலும், 201617ஆம் கல்வியாண்டிலும் முந்தைய நடைமுறைப்படி வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டே மாணவர் சேர்க்கை தமிழகத்தில் நடைபெற்றது.

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து, இந்திய பார் கவுன்சில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய பார் கவுன்சிலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. kaninikkalvi.அந்த உத்தரவு காரணமாக நாடு முழுவதும் சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பை இந்திய பார் கவுன்சில் மீண்டும் கொண்டுவந்தது. 

இந்த நிலையில் இந்திய பார் கவுன்சிலின் 1792016 உத்தரவை எதிர்த்து ரிஷப் துகால் மற்றும் ஏஎன்ஆர் ஆகிய மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த மேல்முறையீட்டு மனுவை 2017 மார்ச் மாதம் விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம், இந்திய பார் கவுன்சிலின் 1792016 உத்தரவுக்கு தடை விதித்தது. அதன் மூலம், நாடு முழுவதும் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புகள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பு மீண்டும் நீக்கப்பட்டது.kaninikkalvi.இந்த உத்தரவு காரணமாக, தமிழகத்திலும் 201718ஆம் கல்வியாண்டில் இளநிலை சட்டப் படிப்புகள் மாணவர் சேர்க்கையில் வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டது. இதனால், 2017 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கு 13,500 பேர் விண்ணப்பித்தனர். இது 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 7500 விண்ணப்பங்கள் கூடுதலாகும்.

இப்போது, 201819 கல்வியாண்டுக்கான சட்டப் படிப்பு சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், வயது உச்ச வரம்பில் அதே நிலை தொடர்கிறது. இது குறித்து சட்டப் பல்கலைக்கழக உயர் அதிகாரி கூறுகையில், வயது உச்ச வரம்பில் முந்தைய ஆண்டு நிலையே தொடர்கிறது. எனவே, 201819ஆம் கல்வியாண்டிலும் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு இளநிலை சட்டப் படிப்புகளில் எந்த வயதினரும் சேர முடியும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews