பிளஸ் 2 தேர்வில், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியானது. 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
மற்ற பாடங்களை விட, பொருளியல், வணிகவியல், உயிரியல் மற்றும் விலங்கியல் பாடங்களில், மாணவர்களின் மதிப்பெண் குறைவாகவே இருந்தது.
இந்த பாடங்களில், கடினமான வினாக்கள் கேட்கப்பட்டதால், பெரும்பாலான மாணவர்கள், 200 மதிப்பெண்களுக்கு எழுதியிருந்தாலும், அவர்களால், 150 மதிப்பெண்களே பெற முடிந்தது
.இவர்களில் பல மாணவர்கள், தங்களுக்கு மதிப்பெண் எப்படி குறைந்தது என்ற குழப்பத்தில் உள்ளனர். இவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்கலாம்.
மறு கூட்டல், மறுமதிப்பீடுக்கான விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது.
மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளி, தேர்வு எழுதிய பள்ளிகளில், நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலுக்கான கட்டணத்தை, அந்தந்த பள்ளிகளில் பணமாக செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடு வேண்டும் என, நினைக்கும் மாணவர்கள், முதலில் விடைத்தாள் நகல் பெற்று, அதை ஆய்வு செய்த பின், மறுமதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.'
இந்த விண்ணப்ப பதிவு இன்றுடன் முடிகிறது. இதற்கு மேல் கால அவகாசம் இல்லை' என, தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.