சென்னையை அடுத்த தாழம்பூர் அக்னி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் மாணவருக்கு கையேடு வழங்குகிறார் பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
பள்ளிகளில் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் மனப்பாடக் கல்விமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டு, கல்வித் திட்டம் மேலும் செம்மைப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
மாணவர்களின் திறன் மேம்பாட்டை வளர்க்கும் 3 நாள் பயிற்சி முகாம் சென்னையை அடுத்த தாழம்பூர் அக்னி காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியது:
இக்கல்லூரி மாணவர்களுக்கு மனப்பாடக் கல்வியை ஊக்குவிக்காமல் திறன்மேம்பாட்டுக் கல்வியைக் கூடுதலாக அளித்து வருவது பாராட்டுக்குரியது.
தமிழகத்தில் கல்வித் திட்டம் தொடர்ந்து செம்மைபடுத்தப்பட்டு, மனப்பாட கல்விமுறையை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு கிடைத்து விடும் அளவுக்கு பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் 3 லட்சம் மாணவர்களுக்கு சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் திறன் பயிற்சிக்கான வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். முகாமில் சிட்கோ நிர்வாக இயக்குநர் அபூர்வா, அக்னி குரூப் துணை தலைவர் அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ், கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.