சட்ட கல்லூரி, 'செமஸ்டர்' தேர்வு : 66 சதவீத வருகை பதிவு அவசியம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 19, 2018

Comments:0

சட்ட கல்லூரி, 'செமஸ்டர்' தேர்வு : 66 சதவீத வருகை பதிவு அவசியம்



தேர்வு எழுத, 66 சதவீத வருகைப் பதிவு அவசியம்' என, சட்டக் கல்லுாரி முதல்வர் பதில் அளித்ததை தொடர்ந்து, மாணவரின் வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லுாரியின், இரண்டாம் ஆண்டு மாணவர் பாலசுப்பிரமணி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: 

மஞ்சள் காமாலை பாதிப்பால், என்னால் கல்லுாரிக்கு வர முடியவில்லை. உடல் நிலை தேறி, கல்லுாரிக்கு வந்தபோது, சட்டக் கல்லுாரி இடமாற்றம் தொடர்பாக, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.அப்போது, ஜனவரி, பிப்ரவரியில், கல்லுாரி செயல்படவில்லை

 அதனால், ஜன., 31க்குள் கட்டணம் செலுத்த முடியவில்லை.எனவே, நான்காவது, 'செமஸ்டர்' தேர்வு எழுத, என்னை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரினார்.மனு, நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

 அம்பேத்கர் சட்டக் கல்லுாரி சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'மாணவர்கள் தேர்வு எழுத, குறைந்தபட்சம், 66 சதவீத வருகைப் பதிவு அவசியம்.

 இல்லையென்றால், தேர்வு எழுத முடியாது. அவர்கள், மீண்டும் அந்த செமஸ்டர் முழுவதும் படிக்க வேண்டும். 'மனுதாரருக்கு, குறைந்தபட்ச வருகைப் பதிவு இல்லை. 

சிறப்பு வகுப்புகளிலும் அவர் பங்கேற்கவில்லை. அதனால், செமஸ்டர் தேர்வு எழுத அவரை அனுமதிக்க முடியாது' 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால், அதில், மனுதாரரை அனுமதிக்க வேண்டும். 'கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டால், மனுதாரருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இவை இரண்டும் இல்லையென்றால், மனுதாரர், மீண்டும் அந்த செமஸ்டர் படித்தாக வேண்டும்' என, உத்தரவிட்டார்.



No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews