ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்படஇருவர் கைது செய்யப்பட்டனர். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 31, 2018

Comments:0

ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்படஇருவர் கைது செய்யப்பட்டனர்.


நெல்லையில் ஆசிரியர் பணியிட நியமன ஆணைக்கு 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

மாவட்ட கல்வி அலுவலரிடமும் விசாரணை நடக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் ஜான்வின்சென்ட். இவரது சகோதரி ரேய்ச்சல் ஜேனட். நம்பித்தலைவன் பட்டயத்தில் உள்ள ஆர்.சி.,பள்ளியில்ஆசிரியையாக பணியாற்றிவந்தார். அவரது பணியிடத்திற்கு நியமன ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கான உத்தரவை பெற, களக்காடு உதவிதொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்துவை அணுகினர். அவர் உத்தரவு தர 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். ஆனால் ஜான்வின்சென்ட்டுக்குபணம் தரவிருப்பம் இல்லை. நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.உதவிதொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்துவின் அலுவலகம் நெல்லை டவுனில் உள்ளது. 

நேற்று அங்கு சென்று ஜான்வின்சென்ட், அவரிடம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அப்போதுமறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இசக்கிமுத்து, அவரது உதவியாளர் கனகசபாபதி ஆகியோரை கைது செய்தனர்.மேலும் கணக்கில் காட்டாத 3 லட்சம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்திரசேகர், கிளார்க் எட்வர்ட் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews