ஜாக்டோ மற்றும் ஜியோ அமைப்பினர் தடுத்து நிறுத்தம்
சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த ஜாக்டோ மற்றும் ஜியோ கூட்டமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், 7வது ஊதியக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தக்கோரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு பள்ளியில் இருந்து புறப்பட்ட 150க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை திட்டக்குடி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அரசு ஊழியர்கள் திடீர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து அழைத்து செல்லும் போது, உயர் அதிகாரிகளின் உத்தரவை அடுத்து விடுவித்தனர். இதே போல் பல மாவட்டங்களில் இருந்து வந்த அரசு ஊழியர் கூட்டமைப்பினர் விருத்தாசலத்தை கடக்கும் போது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் மற்றும் நாகை மாவட்டத்தில் இருந்து வந்த வாகனங்களை காவல்துறையினர் மறித்ததால் 3 மணி நேரத்திற்கும்
மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.