கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று பிளஸ் 2 மாணவி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நேற்றிரவு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் பிளஸ் 2 பயிலும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இது ஐந்தாவது சம்பவமாகும்.
நேற்றிரவு பிளஸ் 2 மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம். மாணவியின் உடல் கூறாய்வு முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளர் வினோஜ் கூறியுள்ளார்.
இந்த சம்பவம்,நேற்று, விருத்தாசலம், ஆயியாா் மடம் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த நாளே மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஒரே மாதத்தில் மட்டும் பிளஸ் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது இது ஐந்தாவது சம்பவமாகும்.
முன்னதாக, கள்ளக்குறிச்சியில் ஜூலை 13ஆம் தேதி பள்ளி விடுதிக் கட்டத்திலிருந்து குதித்து மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறை தமிழகத்தையே உலுக்கியது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தொடர்ந்து பிளஸ் 2 மாணவிகளின் தற்கொலைச் சம்பவங்கள் பெற்றோர்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தொடர்ந்து பிளஸ் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதை கவனத்தில் கொண்டு, மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் அவர்களுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்வதில் இருக்கும் அச்சம் போன்றவற்றை களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.
சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், எந்தச் சூழலிலும் மாணவா்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது; தலைநிமிரும் எண்ணம்தான் இருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும், அண்மைக் காலமாக தமிழகத்தில் நடந்த சில நிகழ்வுகளை எண்ணிப்பாா்க்கின்ற போது, மிகுந்த மன வேதனையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதுபோல, கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.