CM Breakfast Scheme - முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் - Gov't Letter
முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் அனைத்து பள்ளி சமையல் கூடங்களில் அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக திங்கட்கிழமைகளில் பொங்கல் வழங்கப்பட வேண்டும். வாரத்தில் இரு தினங்கள் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் பொங்கல் வழங்கப்பட வேண்டும்.
எனவே பள்ளிகள் திறப்பான 02.06. 2025 திங்கட்கிழமை அன்று பொங்கல் + காய்கறி சாம்பார் வழங்கப்பட வேண்டும்.
பள்ளி சமையல் கூடங்களில் திங்கட்கிழமைகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கோதுமை ரவை உப்புமா இனிமேல் வியாழக்கிழமைகளில் வழங்கப்படும்.
இது தொடர்பாகஒருங்கிணைந்த சமையல் கூட ஒப்பந்ததார்கள் மற்றும் பள்ளி சமையல் பொறுப்பாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி இதனை செயல்படுத்துவதை கண்காணிக்குமாறு அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD CMBFS- Cchange Of Menu - Gov't Letter PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.