மாணவர்கள் படிக்காததால் 50 தோப்புக்கரணம்' போட்ட தலைமை ஆசிரியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 05, 2025

Comments:0

மாணவர்கள் படிக்காததால் 50 தோப்புக்கரணம்' போட்ட தலைமை ஆசிரியர்

930370


மாணவர்கள் படிக்காததால் 50 தோப்புக்கரணம்' போட்ட தலைமை ஆசிரியர்

ரியாக படிக்காத மாணவர்கள் முன்னிலையில், தலைமை ஆசிரியர் காதை பிடித்துக்கொண்டு 50 தோப்புக்கரணம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாது. மாணவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாத நிலையில், சரியாக படிக்காத மாணவர்களை தோல்வி அடையச்செய்யவும் முடியவில்லை. எனவே மாணவர்களை எப்படி நன்றாக படிக்க வைப்பது?'' என்று பல ஆசிரியர்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் சரியாக படிக்காத மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள விஜயநகரம் என்ற இடத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சிந்தா ரமனா. இவர் மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வெளியில் வரிசையாக நிற்க வைத்தார். தலைமை ஆசிரியருடன் ஒரு மாணவரும், ஒரு ஆசிரியரும் நின்றனர்.

மாணவர்கள் மத்தியில் பேசிய தலைமை ஆசிரியர் ரமனா, ''உங்களை எங்களால் அடிக்க முடியாது. உங்களுடன் சண்டையிட முடியாது. எங்களது கைகள் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் உங்களுக்கு கற்றுக்கொடுத்து உங்களை படிப்பில் மேம்படுத்த எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட போதும் உங்களது செயல்பாட்டில் எந்த வித மாற்றமும் இல்லை. வாசிப்பதிலோ அல்லது எழுதுவதிலோ எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. பிரச்னை உங்களிடம் இருக்கிறதா அல்லது எங்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பிரச்னை எங்களிடம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் உங்கள் முன்பு மண்டியிடுகிறேன். நீங்கள் விரும்பினால் எனது காதுகளை பிடித்துக்கொண்டு சிட்-அப்களை செய்யத்தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

அதோடு நிற்காமல் மாணவர்கள் முன்பு அப்படியே படுத்து வணங்கிவிட்டு எழுந்து காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஆசிரியர் தொடர்ந்து அது போன்று செய்ததால் மாணவர்கள் அழுது கொண்டே நிறுத்தும்படி கேட்டனர். தலைமை ஆசிரியர் ரமனா 50 முறை தோப்புக்கரணம் போட்டு முடித்தார். ஆசிரியரின் செயல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது.

இதை பார்த்த மாநில அமைச்சர் லோகேஷ் ஆசிரியரின் செயலை பாராட்டி இருக்கிறார். படிக்காத மாணவர்களை தண்டிக்காமல் தன்னைத்தானே தண்டித்துக் கொண்ட விதத்தை அமைச்சர் பாராட்டி இருக்கிறார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews