இலவச சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 15, 2024

Comments:0

இலவச சேர்க்கை: தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

29ea89ca-26d4-424f-945e-7affa71cb5e0


இலவச சோ்க்கை: தனியாா் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் இலவச சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்ற விவரத்தை தனியாா் பள்ளிகள் தங்களது அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் எனபள்ளிக் கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2024-2025-ஆம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியாா் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி. 1-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு ஏப்.22 முதல் மே 20 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரா்கள், இணையதள வழியாகவோ, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த வட்டார வளமைய அலுவலகங்களிலோ கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

இந்த நிலையில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்படி, தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரத்தை, தனியாா் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84692349