பொதுத் தேர்வு மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 15, 2024

Comments:0

பொதுத் தேர்வு மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு



பொதுத் தேர்வு மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்களுக்கு பணிகள் ஒதுக்கீடு

பள்ளிக் கல்வியில் பிளஸ் 2 உள்ளிட்ட பொதுத் தேர்வு விடைத்தாள்களின் மதிப்பெண்களை சரிபார்க்கும் அலுவலர் களுக்கான பணிகள், பொறுப்புகளை ஒதுக்கீடு செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டது. அதன் விவரம்:

மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் அட்டவணை

யாளர் உதவியுடன் அனைத்து விடைத்தாள்களிலும் உள்ள மதிப் பெண்களை பக்க வாரியான கூடுதல், வினாவாரியான கூடுதல், விடைத் தாளின் மேற்புறத்தில் எடுத்தெழுதப்பட்டது ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். தொடர்ந்து, கட்டு எண், உறை எண், வரிசை எண் என வரி சையாக அடுக்கி சுருக்க விவரத்தாளை மேல் வைத்து இடது மூலையில் தைத்து சுருக்க விவரத்தாளில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற் றும் அட்டவணையாளர் கையொப்பமிட வேண்டும். மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் அன்றைய தினமே சுருக்க விவ ரத்தாள் வைத்து தைக்கப்பட்ட கட்டினை முகாம் அலுவலரிடம் ஒப் படைக்க வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் ரகசிய அறையில் பாதுகாக்கப்பட வேண்டும். உயிரியல் பாடத்தைப் பொருத்தவரையில் மதிப்பெண்கள் கணி னியில் பதியும்பொழுது மதிப்பெண் அட்டவணையின் கீழ் தனியாக எண்ணாலும், எழுத்தாலும் எழுதப்பட்ட முழுமையாக்கப்பட்ட மொத்த மதிப்பெண்ணை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

சுருக்க விவ ரத் தாளுக்கு உரிய பதிவைத் தேதி வாரியாக, பாட வாரியாக, பயிற்று மொழி வாரியாக உரிய பதிவேட்டில் அன்றைய தினமே பதிந்து முகாம் அலுவலர் ஒப்பம் பெறவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews